அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தக்கவைக்க இருக்கும் 4 வீரர்கள் இவர்கள் தான் – லிஸ்ட் இதோ

Iyer

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எஞ்சியுள்ள தொடரானது செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் 15 வது சீசன் 10 அணிகளுடன் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது.

IPL

இதன் காரணமாக அடுத்த ஆண்டு அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதன் படி 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரோ அல்லது இரண்டு இந்திய வீரர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் என எப்படி வேண்டுமானாலும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அதன் அடிப்படையில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது அணியில் தக்கவைக்க வேண்டிய நான்கு வீரர்கள் குறித்து முடிவு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லி அணி தக்கவைக்க நினைக்கும் 4 வீரர்கள் இந்த பதிவில் நாம் காணலாம். அதன்படி அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக சந்தேகமே இன்றி அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தற்காலிக கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோரை தக்கவைக்கும் என்று தெரிகிறது.

Iyer-1

அதேபோன்று வெளிநாட்டு வீரர்களில் கடந்த சில ஆண்டுகளாக டெல்லி அணியின் நட்சத்திர வீரராக விளங்கிவரும் காகிசோ ரபாடாவை தக்கவைக்கும். அதேபோன்று நானகாவது வீரராக ஸ்டோய்னிஸ் அல்லது ஹெட்மயர் ஆகிய இருவரில் ஒருவரை டெல்லி அணி தக்கவைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

Stoinis-2

கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி மும்பை அணியிடம் தோல்வி அடைந்த டெல்லி அணி இந்தாண்டு நடைபெற்று ஒத்திவைக்கப்பட்ட தொடர் வரை முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இளம்வீரர்களை கொண்ட இந்த அணி நிச்சயம் இன்னும் கூடிய விரைவில் ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement