
இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் டெல்லி அணி தங்களது முதலாவது தோல்வியை சந்தித்திருந்தது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 210 ரன்களை குவித்தது. பின்னர் 211 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 209 ரன்கள் குவிக்கவே 1 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ஐபிஎல் போட்டிகளில் ஒரு பரிதாபமான சாதனையை சந்தித்துள்ளது. அதாவது நேற்றைய போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் நான்காவது முறையாக 1 ரன் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த அணியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த டெல்லி அணி 2016 ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணிக்கெதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த டெல்லி அணி நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்னில் தோல்வி சந்தித்தது.
இதையும் படிங்க : சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்து 2 ஆவது வீரராக அசத்தல் சாதனையை நிகழ்த்திய – ஜாஸ் பட்லர்
இப்படி நான்கு முறை ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை சந்தித்து அதிகமுறை ஐபிஎல் போட்டிகளில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த அணி என்ற சாதனையை மோசமான சாதனையை நிகழ்த்தியது. மற்ற எந்த ஒரு அணியும் இதுபோன்று ஒரு ரன் வித்தியாசத்தில் அதிக போட்டிகளில் தோற்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.