ஐபிஎல் 2023 ஏலம் : பண்ட் தலைமையில் பட்டாசாக செயல்பட டெல்லி தக்க வைத்த – விடுவித்த வீரர்களின் பட்டியல்

DC vs PBKS 2
- Advertisement -

பிக்பேஷ், பிஎஸ்எல், கரீபியன் லீக் என உலகில் நடைபெறும் அத்தனை பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கு முன்னோடியாக உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 தொடராக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வழக்கமாக 8 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் இந்த வருடம் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிய 2 அணிகள் சேர்க்கப்பட்டதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 2 நாட்கள் மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதன் காரணமாக இம்முறை 2023 சீசனுக்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று மினி ஏலம் எனப்படும் சிறிய வீரர்கள் ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதற்கு முன்பாகவே ஒப்பந்த முறைப்படி வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த பிசிசிஐ இறுதிக்கட்ட வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு 10 அணி நிர்வாகங்களையும் கேட்டுக் கொண்டது. அதன் படி அனைத்து அணிகளும் தங்களது இறுதி பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் காலம் காலமாக பெயர், ஜெர்ஸி, புதிது புதிதாக கேப்டன்கள் என பல்வேறு மாற்றங்களை செய்து முதல் கோப்பையை முத்தமிட போராடி வரும் டெல்லி அணி நிர்வாகம் 2023 சீசனில் கோப்பையை வெல்வதற்கு தேவையற்ற வீரர்களை விடுவித்துள்ளது.

- Advertisement -

டெல்லி அணி:
அதில் முக்கிய அம்சமாக டிரேடிங் விண்டோ வாயிலாக ஷர்துல் தாகூரை விடுவித்து 10 கோடிகளை மிச்சப்படுத்திய அந்த அணி இளம் வீரர் அமன் கானை குறைந்த செலவில் வாங்கியது. அத்துடன் நியூசிலாந்து வீரர் டிம் சைஃபர்ட், வரலாற்றில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத மந்தீப் சிங், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎஸ் பரத் ஆகியோரையும் அந்த அணி நிர்வாகம் கழற்றி வைத்துள்ளது. அதை விட எப்போதுமே பட்டாசான இளம் வீரர்களுக்கு பஞ்சமில்லாத டெல்லி அணியை மீண்டும் அதிரடி வீரரான ரிசப் பண்ட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் ஆலோசனையுடன் கேப்டனாக வழி நடத்த தக்க வைக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் பிரிதிவி ஷா, யாஷ் துள், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லலித் யாதவ், சர்பராஸ் கான், சேட்டன் சக்கரியா போன்ற துடிப்பான இளம் இந்திய வீரர்களை தக்க வைத்துள்ள டெல்லி நிர்வாகம் டேவிட் வார்னர், அன்றிச் நோர்ட்ஜெ, லுங்கி நிகிடி, மிச்சேல் மார்ஸ் போன்ற ந்ட்சத்திர வெளிநாட்டு வீரர்களையும் 75.55 கோடி ரூபாய் செலவில் தக்க வைத்துள்ளது. இதன் காரணமாக தற்போது அந்த அணியில் அதிகபட்சமாக 5 வீரர்களுக்கான இடம் காலியாக உள்ளது.

- Advertisement -

அதில் அந்த அணியால் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். இந்த 5 வீரர்களை வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் ஏலத்தில் வாங்குவதற்காக அந்த அணியிடம் தற்போது 19.45 கோடி ரூபாய் ஏலத்தொகை கையிருப்பு உள்ளது. அந்த வகையில் எஞ்சியிருக்கும் காலி இடத்திற்கு விரைவில் நடைபெறும் ஏலத்தில் தரமான வீரர்களை வாங்கி முதல் கோப்பையை வெல்வதற்கு மீண்டும் டெல்லி அணி போராட தயாராகியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்: ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் வார்னர், ப்ரித்வி ஷா, ரிபல் படேல், ரோவ்மன் போவல், சர்பராஸ் கான், யாஷ் துள், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்றிச் நோர்ட்ஜெ, சேட்டன் சகாரியா, கமலேஷ் நாகர்கோட்டி, கலில் அஹ்மத், லுங்கி ங்கிடி, முஸ்தபிஸுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஒஸ்த்வால்

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : சஞ்சு சாம்சன் தலைமையில் கோப்பை முத்தமிட ராஜஸ்தான் தக்க வைத்த – கழற்றி விட்ட வீரர்களின் பட்டியல்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: ஷர்துல் தாகூர், டிம் ஷைபெர்ட், அஷ்வின் ஹெப்பர், கேஎஸ் பரத், மந்தீப் சிங்

Advertisement