எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடரிலும் இவரே கேப்டனாக செயல்படுவார் – டெல்லி நிர்வாகம் அறிவிப்பு

Iyer
- Advertisement -

இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் தனது இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார். அதன் பின்னர் தனது காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கிய 14 ஆவது ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

Iyer

- Advertisement -

இதன் காரணமாக டெல்லி அணியை வழிநடத்த புதிய கேப்டனை தேர்வு செய்த டெல்லி நிர்வாகமும் அனுபவம் வீரர்களை தவிர்த்து இளம் வீரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டிடம் கேப்டன்சியை வழங்கியது. தனக்கு வழங்கப்பட்ட இந்த பொறுப்பை சிறப்பாகக் கையாண்ட பண்ட் இந்த தொடரின் முதல் 8 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்று அசத்தலான கேப்டன்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவரது கேப்டன்சியை அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் பெரிய அளவில் ஆதரித்தார். இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது மீண்டும் களம் இறங்க உள்ளதால் அணியின் கேப்டன் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி அதிக அளவில் இருந்தது.

இந்நிலையில் இந்த சீசனின் முதல் பாதியில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்டே மீதமுள்ள எஞ்சிய தொடரிலும் கேப்டனாக செயல்படுவார் என்று டெல்லி அணியின் நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக எஞ்சியுள்ள தொடரிலும் கேப்டனாக ரிஷப் பண்ட்டே கேப்டனாக செயல்படுவார் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த புள்ளிபட்டியலிலும் டெல்லி அணி முதலிடத்தில் உள்ளது.

Advertisement