- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங்கிற்கு இடமில்லை.. முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த – தீப்தாஸ் குப்தா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. அந்த வகையில் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வுசெய்த : தீப்தாஸ் குப்தா

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான தீப்தாஸ் குப்தா இந்த இங்கிலாந்து தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து முழு பட்டியலையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் : துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதுதவிர்த்து மூன்றாவது இடத்தில் தமிழக வீரரான சாய் சுதர்சனை தேர்வு செய்யாமல் கருண் நாயருக்கு அவர் வாய்ப்பு வழங்கி உள்ளார். ஏனெனில் கருண் நாயர் ஏற்கனவே பல ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவதோடு மட்டுமின்றி அனுபவம் வாய்ந்த வீரர் என்பதனால் அவருக்கு முன்னுரிமை வழங்கியுள்ளார்.

அதேபோன்று விராட் கோலியின் நான்காவது இடத்தில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டையும், ஆறாவது இடத்தில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக நிதீஷ் ரெட்டியை தேர்வு செய்துள்ளார். மேலும் எஞ்சியுள்ள ஐந்து பந்துவீச்சாளர்களுக்கான இடத்தில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

மீதமுள்ள மூன்று இடங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு அவர் இடம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 158/2 டூ 172/8.. 12 பந்தில் 5 விக்கெட்ஸ்.. லோகேஷ் மேஜிக்.. திண்டுக்கலிடம் கைமீறிய வெற்றியை பறித்த சேப்பாக்

அந்த வகையில் தீப்தாஸ் குப்தா வெளியிட்டுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ : 1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) கருண் நாயர், 4) சுப்மன் கில், 5) ரிஷப் பண்ட், 6) நிதீஷ் ரெட்டி, 7) ரவீந்திர ஜடேஜா, 8) குல்தீப் யாதவ், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) முகமது சிராஜ், 11) பிரசித் கிருஷ்ணா.

- Advertisement -