- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பேசாம துருவ் ஜுரேலை அந்த தமிழக வீரரின் இடத்தில் விளையாட வைக்கலாம்.. தீப்தாஸ் குப்தா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெற உள்ளது. வரும் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

அந்த அணியில் துருவ் ஜுரேல் விளையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் 2024 இங்கிலாந்து தொடரில் அறிமுகமான்ம் அவர் 2வது போட்டியிலேயே இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆட்டநாயகன் விருது வென்றார். அப்போதிலிருந்தே ரிஷப் பண்ட் காயமடையும் போதெல்லாம் விளையாடும் வாய்ப்பை பெறும் அவர் நல்ல ரன்கள் அடித்து அசத்தி வருகிறார்.

- Advertisement -

துருவ் ஜுரேல் வாய்ப்பு:

குறிப்பாக கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சதத்தை அடித்த அவர் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள் அடித்தார். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை இந்திய அணி நிர்வாகம் விளையாட வைப்பதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் தற்போது ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடத் தயாராக இருக்கிறார்.

அதனால் விக்கெட் கீப்பரான ஜுரேலை யாருக்கு பதிலாக விளையாட வைக்கலாம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை துருவ் ஜுரேல் 3வது இடத்தில் விளையாடுவதற்கு தகுதிகளைக் கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார். அங்கே தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இந்திய அணி தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்து வருகிறது.

- Advertisement -

தமிழக வீரர் இடத்தில்:

அந்த சூழ்நிலையில் இது பற்றி தீப்தாஸ் குப்தா பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் ஜுரேல் 3வது இடத்தில் விளையாடுவதற்கு தேவையான பேட்டிங் டெக்னிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அணி நிர்வாகம் என்பது வருங்காலத்தில் தெளிவுடன் இருக்க வேண்டும். ஏனெனில் 3வது இடத்தில் விளையாடுபவரை தேர்ந்தெடுப்பது பெரிய முடிவு”

இதையும் படிங்க: பவர்பிளே ஓவர்களில் 3 ஓவர்களை பும்ரா வீசுவது ஏன்? தெளிவான விளக்கத்தை கொடுத்த – கோச் கம்பீர்

“ஒருவேளை அவர் ரிஷப் பண்ட்க்கு பேக்-அப் கீப்பராக மட்டும் இருந்தால் அது நீண்ட காலப் பயணத்தில் பிரச்சனையாக இருக்கும். ஏனெனில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தொடர்ச்சியாக கீப்பிங் செய்து விட்டு 3வது இடத்தில் பேட்டிங் செய்வது கடினம். எனவே அது கடினம் என்று கருதினால் அவரை 7வது இடத்தில் நித்திஷ் ரெட்டிக்கு பதிலாக விளையாடலாம்” என்று கூறினார்.

- Advertisement -