INDvsRSA : யோசிச்சி யோசிச்சி எடுத்த முடிவு வேஸ்ட்டா போச்சு – என்ன ரோஹித் இப்படி பண்ணிட்டீங்க?

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை தாங்கள் பங்கேற்ற 2 போட்டிகளிலும் அசத்தலான வெற்றியைப் பெற்று குரூப் 2 பிரிவில் புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி இன்று தங்களது மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து பெர்த் மைதானத்தில் விளையாடி வருகிறது.

Rohit-Sharma

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்சை விளையாடி முடித்துள்ள இந்திய அணியானது 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் யாரும் எதிர்பாரா விதமாக அக்சர் பட்டேலை நீக்கிவிட்டு தீபக் ஹூடாவை அணியில் இணைத்தது தவறான முடிவாகி உள்ளது. ஏனெனில் சவுத் ஆப்பிரிக்கா அணியில் இடதுகை ஆட்டக்காரர்கள் அதிகமாக இருப்பதாலும், பெர்த் மைதானம் சுழலுக்கு கை கொடுக்காது என்பதன் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Deepak Hooda

இதன் காரணமாக நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஹர்திக் பாண்டியாவை முன்னிறுத்தி ஆறாவது பவுலராக சுழற்பந்து வீச்சாளராக தீபக் ஹூடாவை ரோஹித் சர்மா அணியில் இணைத்து இருந்தார். ஆனால் அவர் எடுத்த இந்த முடிவு தற்போது தவறான முடிவாக மாறி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்கவே களத்திற்கு ஐந்தாவது பேட்ஸ்மனாக வந்த தீபக் ஹூடா சற்று நேரம் நின்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : டி20 உலகக் கோப்பை வரலாற்றில் யாராலும் எளிதில் தொட முடியாத புதிய உலகசாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா

இந்த போட்டியில் முன்னணி வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த வேளையில் சூரியகுமார் யாதவ் மட்டும் அரை சதம் கடந்து இந்திய அணியை கவுரவமான ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement