டி20 உலகக் கோப்பை வரலாற்றில் யாராலும் எளிதில் தொட முடியாத புதிய உலகசாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா

Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் பரம எதிரியான பாகிஸ்தானை பழி தீர்த்து 2வது போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த இந்தியா அதை மேலும் உறுதி செய்ய அக்டோபர் 30ஆம் தேதியன்று தன்னுடைய 3வது போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெர்த் நகரில் உள்ள கண்கவர் ஆப்டஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

INDvsRSA-Toss

- Advertisement -

கடந்த 2 போட்டிகளிலும் டாஸ் வென்ற அவர் இப்போட்டியிலும் ஹாட்ரிக் முறையாக டாஸ் வென்றது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்த நிலையில் இந்த முக்கிய போட்டியில் ஒரு மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தார். அதாவது அக்சர் படேலுக்கு பதிலாக இளம் ஆல் ரவுண்டராக தன்னை அடையாளப்படுத்தியுள்ள தீபக் ஹூடா சேர்க்கப்படுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். ஏற்கனவே மிடில் ஆடரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாமல் தடுமாறும் நிலையில் எதற்காக அவர் நீக்கப்பட்டார் என்பதை ரோஹித் தெரிவிக்கவில்லை.

புதிய உலகசாதனை:
மேலும் அவர் காயமடைந்ததாக ரோகித் சர்மா தெரிவிக்காத நிலையில் முதலிரண்டு போட்டிகளில் பந்து வீச்சில் அதிக ரன்கள் வாரி வழங்கிய அக்சர் படேல் பேட்டிங்கிலும் கிடைத்த வாய்ப்பில் சுமாராகவே செயல்பட்டார். ஒருவேளை அதனால் அவருக்கு பதில் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டிருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதை விட இப்போட்டில் களமிறங்கிய ரோகித் சர்மா டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற இலங்கையின் திலகரத்னே ரத்னே சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Rohit-Sharma

கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையில் விளையாடிய ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பையிலும் விளையாடும் 4 வீரர்களில் ஒருவராக ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். அதை விட 2007, 2009, 2010, 2012, 2014, 2016, 2021, 2022* என வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 8 உலக கோப்பைகளிலும் ஒன்றை கூட தவற விடாமல் தொடர்ச்சியாக விளையாடிய ஒரே வீரராகவும் அவர் ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அப்படி இதற்கு முந்தைய உலக கோப்பைகளில் சாதாரண வீரராக தோனி மற்றும் விராட் கோலி தலைமையில் விளையாடிய அவர் இம்முறை இந்தியாவை கேப்டனாக வழி நடத்தும் அளவுக்கு முன்னேறியுள்ளார் என்பது அவருடைய கடின உழைப்பையும் திறமையையும் காட்டுகிறது. அந்த வகையில் இப்போட்டியுடன் சேர்த்து இதுவரை 36 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள அவர் படைத்துள்ள இந்த புதிய உலக சாதனையின் விவரம் இதோ:
1. ரோகித் சர்மா (இந்தியா) : 36* போட்டிகள்
2. திலகரத்னே தில்சான் (இலங்கை) : 35
3. ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்) : 34
4. ட்வயன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) : 34
5. சோயப் மாலிக் (பாகிஸ்தான்) : 34

ROhit Sharma Matthew Wade

முன்னதாக ஏற்கனவே ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (145 போட்டிகள்) என்ற வரலாற்று உலக சாதனையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement