முக்கிய கேட்ச்களை விட்டது ஒன்றல்ல ரெண்டல்ல ! தனக்குத்தானே மண்ணை போட்டு வெளியேறிய லக்னோ – நடந்தது இதோ?

LSG KL Rahul
- Advertisement -

ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் கேட்ச்களை பிடிக்க வேண்டியது ஒவ்வொரு பீல்டரின் இன்றியமையாத கடமையாகும். அதை பிடிக்காமல் விட்டால் இறுதியில் எதிரணி பேட்ஸ்மேன்கள் தோல்வியை பரிசளிக்கும் அளவுக்கு சொல்லி அடித்து காலத்திற்கும் வருத்தப்பட வைத்து விடுவார்கள். அதுபோன்ற தருணங்களில் வரலாற்றில் பல முறை பார்த்த நமக்கு இந்த தொடரில் கூட 12 ரன்கள் எடுத்திருந்த போது அபிஜித் தோமர் கேட்ச் விட்டதை பயன்படுத்திய லக்னோவின் குயின்டன் டி காக் 140* ரன்கள் விளாசி கொல்கத்தாவுக்கு தோல்வியை பரிசளித்ததை பார்த்தோம். அது போன்ற நிகழ்வு மே 25-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற லக்னோ – பெங்களூரு அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டியில் மீண்டும் நடைபெற்றுள்ளது.

Rajat Patidar 112

- Advertisement -

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 207/4 ரன்களை விளாசியது. அந்த அணிக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் டுப்லஸ்ஸிஸ் கோல்டன் டக் அவுட்டாக விராட் கோலி 25 (24) கிளென் மேக்ஸ்வெல் 9 (10) மஹிபால் லோம்ரோர் 14 (9) என முக்கிய பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்கள் எடுக்காமல் பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் டுப்லஸ்ஸிஸ் அவுட்டானதும் களமிறங்கிய இளம் வீரர் ரஜத் படிடார் நிதானமாகவும் அதிரடியாகவும் லக்னோ பவுலர்களை பிரித்து மேய்ந்து சரமாரியான பவுண்டரி சிக்சர்களை பறக்கவிட்டார்.

வெளியேறிய லக்னோ:
கடைசி வரை அவுட்டாகாமல் 12 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 112* (54) ரன்கள் விளாசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் எலிமினேட்டர் போட்டியில் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார். அவருக்கு உறுதுணையாக கடைசி நேரத்தில் பட்டைய கிளப்பிய தினேஷ் கார்த்திக் தனது பங்கிற்கு 5 பவுண்டரி 1 சிக்சருடன் 37* (23) ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்தார். அதைத்தொடர்ந்து 208 என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு குவின்டன் டி காக் 6 (5) மன்னன் வோஹ்ரா 19 (11) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டானதால் 41/2 என ஆரம்பத்திலேயே அந்த அணி தடுமாறியது.

Mohammed Siraj De Kock

இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் அடுத்து வந்த தீபக் ஹூடாவுடன் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரிசெய்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் கடைசி நேரத்தில் தீபக் ஹூடா 45 (26) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மார்கஸ் ஸ்டானிஸ் 9 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அந்த சமயத்தில் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 79 (58) ரன்கள் எடுத்த ராகுலும் 19-வது ஓவரில் அவுட்டாக அடுத்த பந்திலேயே க்ருனால் பாண்டியா கோல்டன் டக் அவுட்டானதால் தோல்வி உறுதியானது. இறுதிவரை 20 ஓவர்களில் 193/6 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ஐபிஎல் 2022 தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

ஒன்றல்ல ரெண்டல்ல:
மறுபுறம் இந்த வெற்றியால் மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் காத்திருக்கும் ராஜஸ்தானுடன் மோத பெங்களூரு தகுதியானது. முன்னதாக இப்போட்டியில் ரஜத் படிதாருக்கு அதிர்ஷ்டம் இருகரம் கொண்டு உதவி செய்தது என்றே கூற வேண்டும்.

1. ஏனெனில் ஆரம்பம் முதலே எதிர்ப்புறம் விக்கெட் விழுந்தாலும் அதிரடியை கைவிடக் கூடாது என்ற நோக்கத்தில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் அரைசதம் கடப்பதற்குள் கொடுத்த 2 கடினமான கேட்ச்களை லக்னோ கோட்டை விட்டது.

- Advertisement -

2. அது கூட பரவாயில்லை என்பது போல் 70 ரன்கள் எடுத்திருந்தபோது அல்வா போல அவர் கொடுத்த எளிதான கேட்ச்சை தீபக் ஹூடா கோட்டை விட்டார். ஒரு வேளை அந்தக் கடைசி வாய்ப்பிலாவது சரியாக பிடித்திருந்தால் எக்ஸ்ட்ராவாக 42 ரன்கள் அடித்திருக்க மாட்டார். அப்படி 3 கேட்ச்களை லக்னோ தவற விட்டதால் தப்பிய அவர் 112 ரன்கள் விளாசி தோல்வியை பரிசளித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

3. சரி அவருக்குத்தான் அதிர்ஷ்டம் இருக்கிறது தப்பினார் என்று பார்த்தால் 37 ரன்களை விளாசிய தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச்சை லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் கோட்டை விட்டதும் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

4. இந்த கேட்ச்களை பிடித்திருந்தால் கண்டிப்பாக பெங்களூரு 180 ரன்களைக் கூட தாண்டியிருக்காது என்பதால் நிச்சயம் லக்னோ வெற்றி பெற்றிருக்கும். அந்த வகையில் கேட்சஸ் வின் மேட்சஸ் என்ற ஆங்கில பழமொழி மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இதையும் படிங்க : விராட், கெயிலையும் மிஞ்சிய கேஎல் ராகுல் 2 புதிய வரலாற்று சாதனை ! ஆனாலும் பயனில்லாமல் லக்னோ வெளியேற்றம்

இது பற்றி போட்டி முடிந்த பின் கேஎல் ராகுல் தவறை ஒப்புக்கொண்டு பேசியது பின்வருமாறு. “அதுதான் நாங்கள் தோல்வி அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அதனால் களத்தில் எங்களை நாங்களே பின்தங்க வைத்து விட்டோம். எளிதான கேட்ச்களை விடுவது வெற்றிக்கு எப்போதும் உதவாது” என்று பேசினார்.

Advertisement