ரெய்னா மாதிரி செயல்படும் அவருக்கு டீமில் சான்ஸ் கொடுக்கலாமே – இளம் வீரரை பாராட்டும் முன்னாள் வீரர்

India Dhawan
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பையின் 15வது தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியுள்ளது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்கு 6 அணிகள் போட்டி போட்டாலும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளுக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து இது போன்ற ஆசிய மற்றும் உலகக்கோப்பைகளில் மட்டும் மோதி வருகிறது. மேலும் கடைசியாக இதே துபாய் மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய போது உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் புதிய சரித்திரம் படைத்தது.

Babar Azam Rohit Sharma IND vs PAK

- Advertisement -

அதனால் தலை குனிந்த இந்தியா இம்முறை தக்க பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. அனல் பறக்கக்போகும் இந்த போட்டியில் களமிறங்கி வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய தரமான 11 பேர் கொண்ட இந்திய அணியை நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தேர்வு செய்து வருகின்றனர். அந்த அத்தனை அணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கும் இளம் வீரர் தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரெய்னா மாதிரி:
விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் இருப்பதே அதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக தன்னுடைய 11 பேர் இந்திய அணியில் நிச்சயமாக அவருக்கு இடமுள்ளது என்று முன்னாள் இந்திய வீரர் சரண்தீப் சிங் வித்தியாசமான அணியை தேர்வு செய்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் க்ருனால் பாண்டியாவுடன் சண்டை போன்ற நிறைய சர்ச்சைகளையும் சவால்களையும் சந்தித்து கடுமையாக போராடி கடந்த பிப்ரவரியில் அறிமுகமான தீபக் ஹூடா அயர்லாந்து டி20 தொடரில் அதிரடியாக சதமடித்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அசத்தி தரமான அடுத்த தலைமுறை இளம் வீரராக தன்னை நிரூபித்துள்ளார்.

Deepak Hooda 104

அப்படி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்தும் திறமை பெற்றுள்ள இவர் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை போலவே செயல்படுவதாக பாராட்டும் சரண்தீப் சிங் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் விளையாடும் 4வது இடத்தில் தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஏனெனில் சூர்யகுமார் யாதவ் பந்துவீச மாட்டார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. ” மிகச்சிறப்பாக செயல்படும் விதத்தை வைத்து அவர் நிச்சயம் அணியில் இருக்க வேண்டும். அதிலும் அவர் 4வது இடத்தில் விளையாட வேண்டும். ஏனெனில் சூர்யகுமார் யாதவ் பந்துவீச மாட்டார்”

- Advertisement -

“உங்களது முதன்மை பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தை சந்தித்தால் தீபக் ஹூடா ஒருசில ஓவர்களை வீசி விக்கெட்களை எடுத்து போனஸாக செயல்படுவார். இல்லையென்றாலும் அவர் விளையாட தகுதியானவர். கடந்த பல வருடங்களாக சுரேஷ் ரெய்னா என்ன செய்தாரோ அதை தீபக் ஹூடா தற்போது செய்து வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் கிடைத்த வாய்ப்புகளில் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுகிறார்” என்று கூறினார்.

Sarandeep-singh

டிகே சான்ஸ்:
அதேபோல் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ள தமிழகத்தின் தினேஷ் கார்த்திகையும் சேர்த்துள்ள அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “நம்மிடம் 2 முதன்மையான சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது ஹர்திக் பாண்டியா 3வதாக செயல்படுவார். சுழல் பந்துவீச்சு துறையில் ஜடேஜா மற்றும் சஹால் ஆகியோருடன் ஹூடா 6வது பவுலராக செயல்படுவார். எனவே நீங்கள் புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் ஆகியோருடன் ஹூடா விளையாடுவதற்காக ஆவேஷ் கானை நீக்குங்கள். ஏனெனில் அவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் பங்களிப்பார்”

- Advertisement -

“நீங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடினால் பேட்டிங் ஆழமும் கிடைக்கும். ஆவேஷ் கான் அந்த பவுலிங்கை தவிர ஃபீல்டிங் அல்லது பேட்டிங்கில் பங்காற்ற மாட்டார். பினிஷெர் இடத்தில் தினேஷ் கார்த்திக் மட்டுமே தகுதியானவர். 37 வயதாகி விட்டார் என்பதற்காக அவரை பெஞ்சில் அமர்த்த முடியாது. சிறப்பாக செயல்படும் அவரை இளம் வீரருக்காக நீக்க முடியாது.

இதையும் படிங்க : IND vs PAK : இன்றைய போட்டியில் களமிறங்குவதன் மூலம் ஜோடியாக சாதனை படைக்கவுள்ள – ரோஹித் அன்ட் கோலி

அவர் அடிக்கும் 20 – 25 ரன்கள் தான் வெற்றியை தீர்மானிக்க கூடியது. எனவே அவருக்கு நிச்சயம் இப்போட்டியில் வாய்ப்பளித்து உலக கோப்பையிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் உலகக் கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலிய சூழலுக்கு ஏற்றவாறு அணியை தயார் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement