என்னோட ஸ்பெஷல் திறமை பாத்து சிஎஸ்கே வாங்குவாங்க.. இல்லனா அந்த அணிக்கு விளையாடுவேன்.. தீபக் சஹர்

Deepak Chahar
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ், தோனி, துபே, ஜடேஜா, பதிரனா ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. டேவோன் கான்வே, தீபக் சஹர் போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களை சென்னை அணி நிர்வாகம் மீண்டும் தக்க வைக்கவில்லை.

இருப்பினும் அவர்களை ஏலத்தில் மீண்டும் சென்னை அணி வாங்குவதற்கு முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மெகா ஏலத்திலும் தம்மை சென்னை அணி தக்க வைக்கவில்லை என்று தீபக் சஹர் தெரிவித்துள்ளார். ஆனால் ஏலத்தில் தம்மை சென்னை மீண்டும் வாங்கியது போல இம்முறையும் வாங்குவார்கள் என்று நம்புவதாக சஹர் கூறியுள்ளார்.

- Advertisement -

சஹர் நம்பிக்கை:

மேலும் ஐபிஎல் தொடரில் பவர்பிளே ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் 90 – 100 ரன்கள் வரை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்குவதாக அவர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட ஆரம்பக்கட்ட ஓவர்களில் புதிய பந்தில் சிறப்பாக செயல்படும் திறமை தம்மிடம் இருப்பதாக சஹர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“கடந்த ஏலத்திலும் சென்னை அணியால் நான் தக்க வைக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் மீண்டும் என்னை ஏலத்தில் வாங்கினார்கள். இந்த வருடமும் அது நடக்குமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய திறமைக்கு அதிக மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் 90 – 100 ரன்கள் அடிக்கப்படுகிறது. அதனாலேயே இப்போது பெரும்பாலான அணிகள் 200 ரன்களை அதிகமாக அடிக்கின்றன”

- Advertisement -

சென்னை வாங்குமா:

“ஆனால் அந்த சூழ்நிலைகளில் எப்படி குறைந்த ரன்களை கொடுக்க முடியும் என்பது பற்றிய என்னுடைய திறமையை நான் நிரூபித்துள்ளேன். அதன் காரணமாக சிஎஸ்கே அணி என்னை மீண்டும் ஏலத்தில் வாங்கும் என்று நினைக்கிறேன். அவர்களுக்காக மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் அணிந்து விளையாட விரும்புகிறேன். ஒருவேளை அப்படி இல்லையென்றால் என்னை ராஜஸ்தான் அணி வாங்குவதற்கு விரும்புகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 1996 மாதிரி 2 பாய்ண்ட்ஸ் கொடுங்க.. முடிஞ்சா பாகிஸ்தானை தடை பண்ணுங்க.. இந்தியா மீது பசித் அலி காட்டம்

முன்னதாக 2018 முதல் சிஎஸ்கே அணிக்காக சஹர் விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் 2018, 2021, 2023 ஆகிய வருடங்களில் சென்னை கோப்பையை வெல்வதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். அதே சமயம் 14 கோடிக்கு வாங்கப்பட்ட 2022 சீசனில் அவர் காயத்தால் முழுமையாக விளையாடவில்லை. தற்போதும் காயத்தால் அடிக்கடி விலகுவதை வாடிக்கையாக வைத்துள்ள அவரை இம்முறை சென்னை வாங்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

Advertisement