- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நான் சிறப்பாக பந்துவீச தோனியும், சி.எஸ்.கே அணியும் தான் காரணம் – தீபக் சாகர் பேட்டி

நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் ராகுல் மற்றும் ஐயர் ஆகியோர் உதவ, பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணியை எளிதாக வெற்றி பெற வைத்தது என்று கூறலாம்.

நேற்றைய போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன்மூலம் தீபக் சாஹர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். டி20 வரலாற்றில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் மற்றும் டி20 போட்டிகளில் குறைவாக ரன்கள் கொடுத்து அதிக விக்கெட் வீழ்த்திய சர்வதேச வீரர் போன்ற சாதனையாக இது பதிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த போட்டி குறித்து சாகர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : இரவு நேரத்தில் பனிப்பொழிவில் பந்து வீசுவது என்பது மிகவும் கடினமான விடயம் இருந்தும் நான் சிறப்பாக பந்துவீச காரணம் யாதெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அந்த அணியின் கேப்டன் தோனியும் தான் என்று கூறுவேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது பெரும்பாலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவில் எப்படி பந்துவீசுவது என்பதை கற்றுக் கொண்டேன்.

பனிபொழிவின் போது எப்பொழுதும் என் கைகளை காய்ந்த மண்ணை வைத்து அடிக்கடி கைகளில் தேய்த்துக் கொண்டு வந்து வீசுவேன். மேலும் என்னோட கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வேன். அதனால் என்னால் பந்தினை இறுக்கமாக பிடித்து பந்துவீச முடிகிறது. மேலும் நாக்பூர் போன்ற மைதானத்தில் ஆப்சைடு மற்றும் லெக்சைடு பவுண்டரி எல்லை தொலைவானது எனவே பேட்ஸ்மேனுக்கு நேராக வீசுவதை விட பேட்ஸ்மேன் அடிக்கும் மாதிரி பந்துகளை ஸ்விங்குடன் சேர்த்து வீச முடிவு செய்தேன். அதற்கேற்றார்போல் பந்தின் வேகத்தையும் குறைத்து வீசியதால் விக்கெட்டுகள் விழுந்தன என்று அவர் கூறினார்.

- Advertisement -
Published by