நாளைக்கு எங்களுக்கு மேட்ச் இருக்கு. இப்படி நடந்தா எப்படி விளையாடுறது – பிரச்சனையில் சிக்கிய இந்திய வீரர்

Deepak Chahar IND
- Advertisement -

அண்மையில் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்த கையோடு தற்போது அடுத்ததாக வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி வங்கதேச நாட்டிற்கு செல்லும் இந்திய அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்த வங்கதேச தொடரில் இந்திய அணியில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் மீண்டும் அணியில் இணைவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைக் கொண்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் நான்காம் தேதி டாக்காவில் நடைபெற உள்ள வேளையில் நியூசிலாந்தில் இருந்த இந்திய வீரர்கள் அங்கிருந்து வங்கதேச நாட்டிற்கு விமான மூலம் சென்றடைந்துள்ளனர். அப்படி நாளை போட்டி துவங்கவுள்ள இவ்வேளையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக்சாகர் நியூசிலாந்தில் இருந்து வங்கதேசத்திற்கு பயணித்தபோது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சந்தித்த மோசமான அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் பகிர்ந்துள்ள கருத்தில் : மலேசியன் ஏர்லைன்ஸ் உடன் பயணித்த அனுபவம் மிகவும் மோசமானது. முதலில் அவர்கள் எங்களிடம் சொல்லாமலேயே எங்களின் விமானத்தை மாற்றினர். பின்னர் நாங்கள் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணித்த போதும் எங்களுக்கு உணவு இல்லை.

- Advertisement -

மேலும் கடந்த 24 மணி நேரமாக நாங்கள் எங்களது லக்கேஜுக்காக காத்திருக்கிறோம். நாளை எங்களுக்கான கிரிக்கெட் போட்டி இருக்கும்போது இப்படி ஒரு பிரச்சனையை கற்பனை செய்து பாருங்கள் என்றும் வருத்தத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் கூறியதாவது :

இதையும் படிங்க : தமிழர் பாரம்பரியத்தை கிண்டலடித்த வடக்கு ரோஹித் சர்மா ரசிகருக்கு – அஷ்வின் கொடுத்த மாஸ் பதிலடி, முழுவிவரம்

செயல்முறை, வானிலை தொடர்பான மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம். உங்களுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் எங்களது லிங்கில் சென்று உங்களது பிரச்சனை குறித்த கருத்தினை பதிவிடலாம் என மலேசியன் விமான நிர்வாகம் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement