- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs BAN : நேற்றைய போட்டியில் தீபக் சாஹர் வெறும் 3 ஓவர்களை மட்டுமே வீசியது ஏன்? – காரணம் இதோ

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முக்கியமான இரண்டாவது போட்டி நேற்று டாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை தவறவிட்டது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த இரண்டாவது போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது துவக்கத்திலேயே 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தாலும் மெஹதி ஹாசன் மற்றும் முகமதுல்லா ஆகியோரது அசத்தலான ஆட்டம் காரணமாக 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் குவித்தது. பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவு 9 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் மட்டுமே குவித்ததால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இந்திய பந்துவீச்சாளர்களின் மெத்தனமான செயல்பாடே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின் போது விளையாடிய இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகர் வெறும் மூன்று ஓவர்கள் மட்டுமே வீசி 12 ரன்கள் விட்டுக் கொடுத்த பின்னர் களத்தில் இருந்து வெளியேறினார். மீண்டும் அவர் பீல்டிங் செய்யவே வரவில்லை. அதேபோன்று பேட்டிங்கில் களமிறங்கிய அவர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஒரு முழுநேர பந்துவீச்சாளராக இருந்தும் அவர் வெறும் 3 ஓவர்களை மட்டுமே ஏன் வீசினார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் அதற்கு தற்போது பதில் கிடைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஏற்கனவே தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர் என மிகப் பெரிய தொடர்களை தவறவிட்ட தீபக் சாஹர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்ற பின்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றார். அதன் பின்னர் தற்போது வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வந்த இவர் இரண்டாவது போட்டியின் போது மீண்டும் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார்.

- Advertisement -

எனவே 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசிய வேளையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவரது காயத்தின் தன்மை மீண்டும் அதிகரித்துள்ளதால் அவர் இந்த ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார் என இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : போட்டியில் தோத்ததை விட இதுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – ரோஹித் சர்மா வருத்தம்

இந்த இரண்டாவது போட்டியில் மட்டும் ரோஹித் சர்மா, தீபக் சாகர் என இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஏற்கனவே முதல் போட்டியில் விளையாடிய குல்தீப் சென்னுக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக இந்த மூவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்ற அதிகாரவபூர்வ தகவலும் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by