தீபக் சாகர் பேட்டிங் செய்யும்போது டிராவிட் அப்படி என்ன சொன்னார் தெரியுமா ? – விவரம் தெரியுமா ?

Chahar
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து ப்ரித்வி ஷா, தவான், இஷான் கிஷன் ஆகியோரது 3 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. 11 ஓவர்களில் 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி சேஸிங்கில் மிகவும் கஷ்டப்படும் என்ற நிலை இருந்தது.

sky

- Advertisement -

இந்நிலையில் மிடில் ஆர்டரில் வந்த மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் இறுதி நேரத்தில் தீபக் சாஹர் 82 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் உதவியுடன் 69 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தீபக் சாகர் முதலில் பொறுமையாக பொறுமையாக ஆடத் தொடங்கி இறுதியில் தேவைக்கு ஏற்ப அதிரடி காட்டி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டியின்போது கடைசிகட்ட நேரத்தில் இந்திய அணியின் பயிற்சியாளரான டிராவிட் தனது அறையிலிருந்து வெளியே வந்து வீரர்கள் அமர்ந்து இருக்கும் இடத்தில் ராகுல் சாகரிடம் ஆலோசனைகளை வழங்கினார்.

dravid 1

அந்த ஆலோசனைகளை பேட்டிங் செய்துகொண்டிருக்கும் தீபக் சாஹரிடம் கூறும்படியும் கூறினார். ஆனால் அவர் என்ன அந்த இடத்தில் கூறினார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது இதனை போட்டி முடிந்து பேசிய ஆட்ட நாயகன் தீபக் சாஹர் வெளிப்படுத்தினார். அந்த வகையில் டிராவிட் கூறியதாவது : தீபக் சாஹர் எல்லா பந்துகளையும் ஆட வேண்டும். இந்திய அணியை வெற்றிபெற செய்ய இது அவருக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. மேலும் நிச்சயம் அவரால் வெற்றிக்கு தேவையான ரன்களை குவிக்க முடியும். எனவே அதிக அளவு பந்துகளை அவரை எதிர் கொள்ளச் செய்யுங்கள் என்று ராகுல் சாகரிடம் டிராவிட் கூறியிருக்கிறார்.

deepak

வெற்றி இலக்கு 50 க்கு குறைவாக வரும் பொழுது என்னால் முடியும் என்ற நம்பிக்கை வந்ததாகவும் அந்த ஒரு சிக்சர் அடித்த பிறகு நிச்சயம் இந்திய அணியை வெற்றி பெறச் செய்து விடுவேன் என்ற நம்பிக்கை கிடைத்ததாகவும் தீபக் சஹர் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement