
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரிலும் சென்னைக்காக 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். ஓய்வுக்குப் பின் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வரும் அவர் 2026 சீசனில் களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக கூல் கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் தோனி பெரும்பாலான சமயங்களில் மைதானத்தில் பொறுமையுடன் செயல்படுவார். ஆனால் அவரும் சில சமயங்களில் பொறுமையிழந்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் 2019 ஐபிஎல் தொடரில் தீபக் சஹர் 2 அடுத்தடுத்த நோபால் பந்துகளை போட்டதால் கோபமடைந்த தோனி அவரது அருகே சென்று திட்டும் வகையில் பேசினார்.
அதனால் எஞ்சிய பந்துகளை நன்றாக வீசிய தீபக் சஹர் அப்போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு உதவினார். இந்நிலையில் அன்றைய நாளில் “உன்னை நம்பித் தானே பந்தைக் கொடுத்தேன். அதற்காக இவ்வளவு முட்டாள்தனமாக பந்து வீசுவாயா?” என்ற வகையில் தோனி தம்மை திட்டியதாக சஹர் தெரிவித்துள்ளார். இது பற்றி பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் தன்னுடைய தங்கை மால்தி சஹருடன் நிகழ்த்திய உரையாடலின் போது அவர் பேசியது பின்வருமாறு.
“அந்தப் போட்டியில் முதல் முறையாக நான் டெத் ஓவரில் பந்து வீசினேன். அதற்கு முன்பு வரை எனக்கு பவர்பிளேவில் பந்து வீசும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. எனவே பலமுறை யோசித்த பின் மஹி பாய் அன்று என்னிடம் டெத் ஓவரில் பந்து வீசுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். எதிர்ப்புறம் சர்பராஸ் கான் பேட்ஸ்மேனாக இருந்தார். அதற்கு தயாராகும் போது குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு குறிப்பிட்ட பந்துகளை வீச வேண்டும் என்று நாங்கள் விவாதித்திருந்தோம்”
“அதன் அடிப்படையில் மெதுவான பந்தை வீச முயற்சித்த நான் தவறுதலாக லெட் கட்டர் பந்தை போட்டேன். அப்போது கால் நழுவியதால் முதல் பந்தே ஃபுல்டாஸாக மாறியது. நோ-பாலாக மாறிய அப்பந்தை சர்பராஸ் பவுண்டரியாக அடித்தார். அங்கே திட்டம் சரியாக இருந்த போதிலும் செயல்படுத்துதல் தவறானது. மீண்டும் அப்பந்தை முயற்சித்த போது மறுபடியும் நோ-பாலானது”
இதையும் படிங்க: ரோட் மாதிரி சவாலான கௌகாத்தி பிட்ச்சில்.. இந்தியா இதை செஞ்சு கம்பேக் கொடுக்கும்.. குல்தீப் பேட்டி
“அப்படி பந்து வீசாமலேயே 8 ரன்கள் கொடுத்ததால் என்னிடம் வந்த மஹி பாய் சீற்றமாக எதையோ சொன்னார். குறிப்பாக நீ முட்டாள் அல்ல. நான் தான் உன்னை நம்பினேன் என்று அவர் சொன்னார். அதனால் இனிமேல் எனக்கு டெத் ஓவரில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்த நான் கடைசி 5 பந்தில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தேன். அதனால் நாங்கள் போட்டியை வென்றோம்” என்று கூறினார்.