தீபக் சாஹர் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லையாம் – வெளியான மெடிக்கல் ரிப்போர்ட்

Deepak
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் பந்தினை இருபுறங்களிலும் ஸ்விங் செய்வதில் கெட்டிக்காரர். அதோடு பவர்பிளே ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தும் இவரது திறமை இந்திய அணியில் இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாகர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடந்த பல மாதங்களாகவே அவருக்கு அடுத்தடுத்து பெரிய சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் t20 தொடரை முடித்த கையோடு இலங்கை தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Deepak

- Advertisement -

ஆனால் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து அவர் விலகினார். ஆனாலும் அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் அவரை 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இருப்பினும் அந்த தொடரின் முதல் பாதியை காயம் காரணமாக தவறவிடும் அவர் இரண்டாவது பாதியில் விளையாடுவார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் அப்போது தான் பிரச்சனை ஆரம்பித்தது. ஆம், தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஓய்வில் இருந்த தீபக் சாஹர்-க்கு அடுத்ததாக முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரை முழுவதுமாக தவறவிட்ட அவர் அதன்பிறகு காயத்திலிருந்து மீண்டு வந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து காயத்தின் வீரியம் குறையாமல், காயம் குணமடையாமலும் இருந்ததால் ஐபிஎல் தொடருக்கு அடுத்து தற்போது நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க தொடரில் அவர் இடம்பெறவில்லை.

deepak 1

அதேபோன்று அடுத்ததாக அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணியிலும் அவர் பெயர் பரிசீலிக்கப்படவே இல்லை. எனவே தீபக் சாஹரின் உடல் நிலை என்ன ஆனது? என்பது குறித்து கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இந்நிலையில் தீபக் சாஹரின் தற்போதைய உடல் நிலை என்ன? அவர் உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தீபக் சாஹரின் காயம் குணமடைய இன்னும் ஆறு வாரங்கள் ஆகும் என்றும் இதன் காரணமாக அவர் அடுத்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதோடு அவரது காயம் ஆகஸ்ட் மாதம் தான் குணமடைந்து மீண்டும் களத்திற்கு திரும்புவார் என்பதனால் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை தொடரில் அவரால் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் அதிக சதங்கள் – அடித்த டாப் 6 பேட்ஸ்மேன்கள்

இதன் காரணமாக இந்த உலக கோப்பை தொடரினை தீபக் சாஹர் காயம் காரணமாக தவற விடுகிறார் என்பது உறுதியாகியுள்ளது. அதே வேளையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, ஹர்ஷல் பட்டேல் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரே திகழ்வார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement