முதலாவது டி20 போட்டியில் மட்டுமின்றி எஞ்சியுள்ள 2 டி20 போட்டிகளிலும் இருந்து விலகவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ

IND-vs-RSA
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று டிசம்பர் 10-ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்தது.

ஆனால் டர்பன் நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் முதலாவது டி20 போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள 2 டி20 போட்டிகள் டிசம்பர் 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் இதுவரை தென் ஆப்பிரிக்கா சென்றடையவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் முதல் போட்டியில் மட்டுமின்றி எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் இருந்தும் வெளியேற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏனெனில் அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரின் போது மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருந்த தீபக் சாஹர் நான்காவது போட்டியில் விளையாடியிருந்த வேளையில் ஐந்தாவது டி20 போட்டிக்கு முன்பாக அவரது தந்தை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் அவர் அவரின் உடல்நிலை கருத்தில் கொண்டு இந்திய அணியில் இருந்து விலகினார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5 ஆவது டி20 போட்டியை தவறவிட்ட தீபக் சாஹர் தற்போது தந்தையுடன் மருத்துவமனையில் இருக்கிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையும் பட்சத்தில் அவர் தென்னாப்பிரிக்கா சென்றடைவார் என்று கூறப்பட்ட வேளையில் இன்னமும் அவர் தென் ஆப்பிரிக்கா செல்லாமல் இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்தியா – தெ.ஆ டி20 தொடர்.. முதல் மேட்ச்லயே இப்படியா ஆகணும்.. ரசிகர்கள் ஏமாற்றம்

இதன்காரணமாக தீபக் சாஹர் நிச்சயம் எஞ்சியுள்ள 2 டி20 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. அதேவேளையில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளதால் ஒருநாள் தொடரில் இணைவாரா? மாட்டாரா? என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement