இந்தியாவில் வருகிற மார்ச் 26-ஆம் தேதி பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது துவங்குகிறது என்பது ஏற்கனவே உறுதியான நிலையில் தற்போது இந்த தொடருக்கான முழு அட்டவணையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியாக கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இந்த ஆண்டு முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஏற்கனவே பெங்களூருவில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த வீரர்களின் மெகா ஏலத்தில் அனைத்து அணிகளுக்கான வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியில் உள்ள வீரர்களை இணைத்து பலமான அணியை கட்டமைத்து வருகிறது. அதே போன்று சென்னை அணியும் தற்போது தாங்கள் அணிக்குள் கொண்டுவந்துள்ள புதிய வீரர்களை வைத்து அணியை தயார் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சிஎஸ்கே அணியில் ரூபாய் 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர் பெரும்பாலான போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது. ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் காயமடைந்த அவர் தற்போது பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இருப்பினும் அவரது இந்த காயத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள அதிக நாட்கள் பிடிக்கும் என்பதாலும் காயம் குணமடையவும் இன்னும் நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதாலும் அவர் இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளை தவறு விடுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அவரது காயம் குறித்த மற்றொரு தகவலின்படி நிச்சயம் அவர் பெரும்பாலான போட்டிகளை தவறவிடுவது உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக அவரது இந்த இழப்பு அந்த அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இதுவரை சென்னை அணிக்காக 58 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் மட்டும் தீபக் சஹர் நாற்பத்தி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியின் அருமையான துவக்கத்திற்கு எப்போதுமே வழி வகுத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடர்னா மட்டும் இனிக்கும். நாட்டுக்கு விளையாட கசக்குதா – முன்னணி வீரரை கேள்வி கேட்க்கும் நிர்வாகம்
இந்நிலையில் இந்த ஆண்டு அவர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அது அவருக்கு மட்டுமல்லாது சென்னை அணிக்கும் பெரிய பின்னடைவைத் தரும். மேலும் அணியின் நிர்வாகத்திற்கு அவரது இடத்திற்கான மாற்று வீரரை தேர்வு செய்வது என்பது ஒரு கடினமான வேலையாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



