ஐ.பி.எல் தொடர்னா மட்டும் இனிக்கும். நாட்டுக்கு விளையாட கசக்குதா – முன்னணி வீரரை கேள்வி கேட்க்கும் நிர்வாகம்

Shakib
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. வரும் மார்ச் 18-இல் துவங்கும் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன் பின் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.

- Advertisement -

இந்த தொடருக்கான வங்கதேசம் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் வங்கதேச அணியின் மகத்தான நட்சத்திர ஆல்ரவுண்டர் மற்றும் முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசன் பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால் தற்போது தமக்கு உள்ள மனநிலை மற்றும் உடல்நிலை காரணமாக தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்பது சந்தேகம் என சாகிப் அல் ஹசன் கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு :

புறக்கணிக்கும் ஷாகிப்:
“தற்போது நான் உள்ள மனநிலை மற்றும் உடல் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது சாத்தியம் என எனக்குத் தோன்றவில்லை. தற்போது நான் ஓய்வெடுத்துக் கொண்டு அதன் பின் விளையாடினால் எனக்கு எளிமையாக இருக்கும். சமீபத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் தொடரில் நான் ஒரு பயணியைப் போல் உணர்ந்தேன். அந்த தொடரில் நடந்த ஒருநாள், டி20 போட்டிகளில் நான் விரும்பி விளையாடவில்லை. எனவே இந்த மனநிலையுடன் நான் தென் ஆப்பிரிக்காவில் சென்று விளையாட கூடாது எனக் கருதுகிறேன்” என கூறினார்.

இது பற்றி வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்பதற்காக தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் சாகிப் அல் ஹசன் விலகும் முடிவை எடுத்தார். அதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியமும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக பெங்களூருவில் நடந்த ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் வலிக்காதா:
அதை அறிந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பதால் தென்ஆப்ரிக்க தொடருக்கான வங்கதேச அணியில் அவரின் பெயரை சேர்த்தது. ஆனால் தற்போது திடீரென மன நிலையை காரணம் காட்டி தென்ஆப்ரிக்க தொடரில் விலகுவதாக அவர் கூறுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரின் இந்த முடிவு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது.

Shakib Al Hasan Nazmul Hussain

இது பற்றி வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹுசைன் பேசியது பின்வருமாறு. “அவரின் இந்த முடிவு ஒரு லாஜிக் பற்றி யோசிக்க வைக்கிறது. அதாவது அவரின் மன நிலைமை மோசமாக இருந்தால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான ஏலத்தில் அவரின் பெயரை கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும் அல்லவா?” என கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பெயரை கொடுத்த அவர் கொடுத்தபடியே ஏதாவது ஒரு அணிக்காக மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டிருந்தால் ஐபிஎல் தொடரில் விளையாடி இருப்பார்.

- Advertisement -

அப்படி ஐபிஎல் தொடரில் விளையாடினால் மட்டும் மனநிலையும் உடல்நிலையும் வலிக்காதா? மேலும் அதே தேதிகளில் வங்கதேசத்துக்காக தென் ஆப்பிரிக்காவில் சென்று விளையாடினால் மட்டும் மன நிலைமை மோசமாகிவிடுமா என்ற நியாயமான கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

shakib 1

என்ன நியாயம்:
“ஐபிஎல் தொடரில் அவர் விளையாடி இருந்தால் இதே பதிலை கூறுவாரா? மேலும் இந்த போட்டியில் நான் விளையாடுவேன், அந்த போட்டியில் நான் விளையாட மாட்டேன் என அவர் தொடர்ந்து கூற முடியாது. அவரைப் போன்ற ஒரு நல்ல வீரர்களிடம் நாங்கள் மென்மையாக நடந்து கொள்வோம். அதற்கு ஏற்றார் போல் அவர்களும் தேசத்துக்காக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லையெனில் யாரும் விரும்பாத கடினமான முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்” என இது பற்றி வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹூசைன் மேலும் கூறினார்.

- Advertisement -

சாகிப் அல் ஹசன் போன்ற ஒருவர் தாய்நாட்டுக்காக இந்தப் போட்டியில் விளையாடுவேன் அந்தப் போட்டியில் விளையாட மாட்டேன் என அடம் பிடிக்கக் கூடாது என வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஜடேஜாவின் பெரிய மனசை அப்போ தான் பாத்தேன் – தமிழக வீரர் அஷ்வின் பகிர்ந்த சுவாரசிய தகவல்

மேலும் அவரைப் போன்ற ஒருவர் இதுநாள் வரை சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக பாடுபட்டதால் தான் மென்மையாக நடந்து கொள்வதாக தெரிவித்த அவர் இதே போல அவர் நடந்து கொண்டிருந்தால் விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Advertisement