ஜடேஜாவின் பெரிய மனசை அப்போ தான் பாத்தேன் – தமிழக வீரர் அஷ்வின் பகிர்ந்த சுவாரசிய தகவல்

Ashwin-Jadeja
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இருவருமே டெஸ்ட் அணியின் முதன்மை சுழல் பந்துவீச்சாளர்களாக இருந்தாலும் பேட்டிங்கிலும் அணிக்கு கொடுப்பதால் தொடர்ச்சியாக இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இடம் பெற்று விளையாடி வருகின்றனர். ஜடேஜா இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் வேளையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னணி வீரராக விளையாடி வருகிறார்.

Ashwin

- Advertisement -

மேலும் அவர் தற்போது மீண்டும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றி பெற முக்கிய காரணமாக இவர்கள் இருவரது செயல்பாடும் முக்கிய காரணமாக அமைந்தது.

ஏனெனில் பேட்டிங்கின் போது ஜடேஜா முதல் இன்னிங்சில் 175 ரன்களும், அஸ்வின் அரைசதமும் குவித்தனர். அதனைத் தொடர்ந்து பந்துவீச்சிலும் இருவரும் சேர்ந்து 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக ஜடேஜா இரண்டு இன்னிங்ஸ்ஸையும் சேர்த்து ஒன்பது விக்கெட்டுகளையும், அஷ்வின் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் மொத்தம் விழுந்த 20 விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகளை இவர்கள் இருவர் மட்டுமே கைப்பற்றினர். இப்படி இந்திய அணியின் பந்துவீச்சை பலப்படுத்திய இவர்கள் இருவரும் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்கு இதேபோன்று சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றர்.

மேலும் நடைபெற்று முடிந்த இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தமிழக வீரர் அஸ்வின் கபில் தேவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஸ்வின் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் சக வீரரான ஜடேஜாவின் பெருந்தன்மையான மனது குறித்து போட்டி முடிந்தபின் பேட்டியளித்துள்ள அஸ்வின் கூறுகையில் : மொகாலி டெஸ்ட் போட்டியின்போது ஜெயந்த் யாதவிற்கு கூடுதலாக ஓவர்களை வழங்க வேண்டும் என்று கேப்டன் ரோஹித் சர்மா விரும்பினார். ஏனெனில் அணியில் மூன்றாவதாக இடம்பிடிக்கும் சுழற்பந்து வீச்சாளருக்கு எப்போதுமே பந்துவீச பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காது. அவர்கள் ஒரு முனையில் மட்டுமே இருந்து பந்து வீச முடியும்.

இதையும் படிங்க : வெளிநாட்டில் அஷ்வின் இந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார் – வாயை விட்ட ஆகாஷ் சோப்ரா (கோபத்தில் ரசிகர்கள்)

இந்த வேளையில்தான் ஜெயந்த் யாதவுக்கு அதிக ஓவர்கள் வழங்க வேண்டுமென்று நினைத்து ஜடேஜா அவருக்கு தனது வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தார். இதன் காரணமாக ஜெயந்த் யாதவுக்கு ஒரு சில ஓவர்கள் கூடுதல் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவருடைய பெருந்தன்மையான மனதை தான் பார்த்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயந்த் யாதவிற்காக ஜடேஜா விட்டுக் கொடுத்ததை பார்த்த பின்னர் தான் நானும் எனது பந்துவீச்சை விட்டுக் கொடுத்தேன் என அஸ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement