வெளிநாட்டில் அஷ்வின் இந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார் – வாயை விட்ட ஆகாஷ் சோப்ரா (கோபத்தில் ரசிகர்கள்)

Chopra
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 4ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சை 574/8 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

ind

- Advertisement -

இந்தியா சார்பில் அதிகபட்சமாக கடைசி வரை அவுட்டாகாமல் இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடிய ரவிந்திர ஜடேஜா 175* ரன்கள் எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கையை இம்முறை பந்துவீச்சில் தொல்லை கொடுத்த ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.இதனால் வெறும் 174 சுருண்ட அந்த அணி பாலோ – ஆன் பெற்று தனது 2வது இன்னிங்ஸில் தோல்வியை தவிர்க்க போராடியது.

வெள்ளி அஷ்வின்:
இருப்பினும் இந்தியாவின் தரமான சுழல் பந்துவீச்சு ஜோடியான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுக்க அந்த அணி மீண்டும் வெறும் 178 ரன்களுக்கு சுருண்டது. இதன் வாயிலாக இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 5வது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

ashwin 1

முன்னதாக இந்தப்போட்டியில் மொத்தம் 6 விக்கெட்டுகள் எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்தார். முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் ஜாம்பவான் கபில் தேவ் 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகளை எடுத்து இதுநாள் வரை அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். ஆனால் தற்போது 85 போட்டிகளில் 436 விக்கெட்டுகளை எடுத்துள்ள அஷ்வின் அவரை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அனில் கும்ப்ளேவை முந்துவாரா:
இது மட்டுமல்லாமல் 619 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ள ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை அவர் முந்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் உடைப்பாரா என்பது பற்றி முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

chopra

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னை பொருத்தவரை அது கடினமான ஒன்று என்பதால் அது சாத்தியமில்லை. மேலும் சமீப காலங்களாக நாம் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்பதால் அது 100% நடக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன். 2 வருட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரைப் பார்க்கும் போது நாம் 3 உள்ளூர் மற்றும் 3 வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறோம்” என கூறினார். சமீப காலங்களாக பெரிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுவதில்லை என்பதால் கும்ப்ளே சாதனையை அவர் உடைப்பது கடினம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -

வெளிநாட்டில் சரிப்பட்டு வரமாட்டார்:
“அவர் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் 25 விக்கெட்டுகளை எடுப்பதில்லை. மிகவும் குறைந்தபட்ச விக்கெட்டுகளை மட்டுமே எடுக்கிறார். அதனால் வெளிநாடுகளில் விளையாட 100% வாய்ப்புகள் அவருக்கு கிடைக்குமா என தெரியவில்லை. இங்கிலாந்து போன்ற நாடுகளில் அவருக்கு பதிலாக ஜடேஜா தான் விளையாடுவார். அப்படிப்பட்ட வேளையில் அவரால் எப்படி விக்கெட்டுகள் எடுக்க முடியும். மேலும் இந்திய மண்ணில் கூட வெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் மட்டுமே நடைபெறுவதால் அவரால் எப்படி பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்க முடியும். அந்த இலக்கை அடைவதற்கு இன்னும் 180+ விக்கெட்டுகள் தேவை. அடுத்த 3 – 4 வருடங்கள் அவர் மிகச் சிறப்பாக விளையாடி 50 – 60 விக்கெட்டுக்கள் எடுத்தால் கூட அந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமாகும்” என இதுபற்றி ஆகாஷ் சோப்ரா மேலும் தெரிவித்தார்.

Ashwin

வெளிநாடுகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக அளவில் விக்கெட்டுகளை எடுப்பதில்லை என அவர் கூறியது ரசிகர்களை மிகவும் கோபமடைய செய்துள்ளது. ஏனெனில் ஆரம்ப காலங்களில் வெளிநாடுகளில் அஸ்வின் தடுமாறியது உண்மை தான் என்றாலும் சமீப காலங்களாக வெளிநாடுகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த 2020/21ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அப்போதைய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட் செய்தது உட்பட அந்த தொடரில் அஸ்வின் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

- Advertisement -

மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சவுதம்டன் நகரில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப் போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறினார்கள். ஆனால் அந்த போட்டியில் அபாரமாக செயல்பட்டு 2 இன்னிங்ஸ்களிலும் நியூசிலாந்தின் முதல் விக்கெட்டை அஸ்வின் தான் எடுத்தார். அத்துடன் 54 விக்கெட்டுகளுடன் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராகவும் அவர் சாதனை படைத்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : சென்னை அணியின் முழு அட்டவணை, வீரர்கள் விவரம், உத்தேசப்ளேயிங் லெவன் இதோ

இப்படி கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவரை வெளிநாட்டில் சரிப்பட்டு வரமாட்டார் என ஆகாஷ் சோப்ரா மட்டுமல்ல இந்திய நிர்வாகம் கூட அப்படித்தான் நினைத்து வருகிறது. தற்போதைய தேதியில் உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக இருக்கும் அவருக்கு முதலில் வாய்ப்பு கொடுங்கள், அப்போதுதான் அவரால் சாதிக்க முடியும்.

Advertisement