ஐபிஎல் 2022 : சென்னை அணியின் முழு அட்டவணை, வீரர்கள் விவரம், உத்தேசப்ளேயிங் லெவன் இதோ

CSK-1
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15 வது சீசன் இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்திற்கு மாறாக 60 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது.

IPL

- Advertisement -

வரும் மார்ச் 26ஆம் தேதி அன்று துவங்கும் ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 2 மாதங்கள் நடைபெறும் இந்த தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி வரும் மே 29ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளதாக தெரியவருகிறது.

முழு அட்டவணை அறிவிப்பு:
மேலும் இந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் வழக்கமாக நடைபெறும் 7 – 8 நகரங்களுக்கு பதிலாக மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது. இதில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று தொடர் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள 4 முக்கிய மைதானங்களில் மட்டும் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

CSK

இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்கான முழு அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மார்ச் 26 முதல் மே 22 வரை நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. பைனல் உள்ளிட்ட பிளே – ஆப் சுற்று போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ்:
அந்த அட்டவணையின் படி 4 முறை சாம்பியன் பட்டம் வென்று நடப்பு சாம்பியனாக விளங்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் குரூப் பி பிரிவில் முதல் அணியாக இடம் பிடித்துள்ளது. இந்த அட்டவணையின் படி அந்த அணி 2 பகல் போட்டிகளில் அதாவது 3.30 மணி போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளது. எஞ்சிய போட்டிகள் அனைத்தும் இரவு நேர போட்டியாக விளையாட உள்ளது.

CSKvsMI

ஐபிஎல் 2022 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அட்டவணை இதோ:
மார்ச் 26, இரவு 7.30 மணி, சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா V நைட் ரைடர்ஸ், வான்கடே மைதானம், மும்பை.

- Advertisement -

மார்ச் 31, இரவு 7.30 மணி லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், ப்ராபோர்ன் மைதானம், மும்பை.

ஏப்ரல் 3, இரவு 7.30 மணி, சென்னை சூப்பர் கிங்ஸ் V பஞ்சாப் கிங்ஸ், ப்ராபோர்ன் மைதானம், மும்பை.

- Advertisement -

ஏப்ரல் 9, மதியம் 3.30 மணி, சென்னை சூப்பர் கிங்ஸ் V சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டிஒய் பாட்டில் மைதானம் மும்பை.

ஏப்ரல் 12, இரவு 7.30 மணி, சென்னை சூப்பர் கிங்ஸ் V ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டிஒய் பாட்டில் மைதானம் மும்பை.

ஏப்ரல் 17, இரவு 7.30 மணி, குஜராத் டைட்டன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், எம்சிஏ மைதானம், புனே.

ஏப்ரல் 21, இரவு 7.30 மணி, மும்பை இந்தியன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், டிஒய் பாட்டில் மைதானம், மும்பை.

ஏப்ரல் 25, இரவு 7.30 மணி, பஞ்சாப் கிங்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், வான்கடே மைதானம், மும்பை.

மே 1, இரவு 7.30 மணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் V சென்னை சூப்பர் கிங்ஸ் எம்சிஏ மைதானம், புனே.

மே 4, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் V பெங்களூரு சென்னை சூப்பர் கிங்ஸ், எம்சிஏ மைதானம், புனே.

மே 8, இரவு 7.30 மணி, சென்னை சூப்பர் கிங்ஸ் V டெல்லி கேப்பிடல்ஸ், டிஒய் பாட்டில் மைதானம், மும்பை.

மே 12, இரவு 7.30 மணி, சென்னை சூப்பர் கிங்ஸ் V மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானம், மும்பை.

மே 15, மதியம் 3.30 மணி, சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் V வான்கடே மைதானம், மும்பை.

மே 20, இரவு 7.30 மணி, ராஜஸ்தான் ராயல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், ப்ராபோர்ன் மைதானம், மும்பை.

CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:
ஐபிஎல் 2022 ஏலத்தில் சென்னை அணிக்காக அதிகபட்சமாக 14 கோடிகளுக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் காயம் காரணமாக விலகுவாரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முழு அணி இதோ:

எம்எஸ் தோனி (கேப்டன் – 12 கோடி), ரவீந்திர ஜடேஜா (16 கோடி), மொய்ன் அலி (8 கோடி), ருதுராஜ் கைக்வாட் (6 கோடி), தீபக் சஹர் (14 கோடி), ராபின் உத்தப்பா (2 கோடி, அம்பத்தி ராயுடு (6.75 கோடி), டேவோன் கோன்வே (1 கோடி), சுபிரான்ஷு சேனாபதி (20 லட்சம்), கேஎம் ஆசிப் (20 லட்சம்), துஷார் தேஷ்பாண்டே (20 லட்சம்), மகேஸ் தீக்ஷனா(70 லட்சம்), சிமர்ஜீத் சிங் (20 லட்சம்), ஆடம் மில்னே (1.90 கோடி), முகேஷ் சௌத்திரி( 20 லட்சம்), ட்வயன் ப்ராவோ (4.40 கோடி), ஷிவம் துபே (4 கோடி), ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (1.50 கோடி), டிவைன் பிரிடோரிஸ் (50 லட்சம்), மிட்செல் சாண்ட்னெர் (1.9 கோடி), பிரஷாந்த் சோலங்கி (1.20 கோடி), நாராயண் ஜெகதீசன் (20 லட்சம்), ஹரி நிஷாந்த் (20 லட்சம்), கிறிஸ் ஜோர்டான் (3.6 கோடி), பகத் வர்மா (20 லட்சம்)

இதையும் படிங்க : குஜராத் டீம்ல சேரும் படி கோரிக்கை வைக்கும் ரசிகர்கள். ஆனால் ரெய்னா என்ன பண்ணிக்கிட்டு – இருக்காரு பாருங்க

ஐபிஎல் 2022 தொடரில் களமிறங்க போகும் உத்தேச சென்னை சூப்பர் கிங்ஸ் 11 பேர் அணி இதோ:
ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே*, மொய்ன் அலி*, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, எம்எஸ் தோனி (கேப்டன்/கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, ட்வயன் ப்ராவோ*, தீபக் சஹர்/ராஜ்வர்தன் ஹங்ரேகர், கிறிஸ் ஜோர்டான்/ஆடம் மில்னே*. (*=வெளிநாட்டு வீரர்கள்)

Advertisement