ரிஷப் பண்ட் தவறு செய்யும் இடம் இதுதான். அதை மாத்தலனா அவர் காலி – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இந்த தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

indvseng

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் இந்த தொடர் முழுவதுமே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்தியாவிலும் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனால் நிச்சயம் இந்த இங்கிலாந்து தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் இந்த தொடர் முழுவதுமே 5 இன்னிங்க்ஸ்களையும் சேர்த்து 87 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்துள்ளார். அவரது இந்த மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கூறுகையில் :

pant 4

இந்த தொடரில் ரிஷப் பண்ட் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் அவர் தனது அதிரடி ஆட்டத்தில் இருந்து விலகப் போவதில்லை. அவர் நிச்சயம் அதிரடியாக தான் விளையாடுவார் ஆனாலும் அவரது தவறு யாதெனில் அவரது ஷாட் செலக்ஷனில் மட்டும்தான். இங்கிலாந்து மைதானங்களில் ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஆகிய இருவருக்கும் இடையே நல்ல பவுன்சர் பந்துகளை அடிக்க முயற்சி செய்கிறார்.

அதனால் அவரது தவறான ஷாட் செலக்ஷனில் தான் அவர் ஆட்டமிழந்து வெளியேறுகிறார். அவுட் சைடு ஆப் பந்துகளை அடிக்க நினைத்து ரிஷப் பண்ட் ஆட்டமிழந்து வெளியேறுகிறார். ஷாட் செலக்ஷனில் மட்டும் அவர் இன்னும் கவனம் செலுத்தினால் நிச்சயம் அவரால் சிறப்பாக விளையாட முடியும். இல்லை என்றால் அவர் மீண்டும் மீண்டும் ஆட்டம் இழக்க நேரிடும் என தீப்தாஸ் குப்தா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement