கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாட முடியும் ? – தீப் தாஸ் குப்தா கணிப்பு

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அண்டர் 19 இந்திய அணிக்கு தலைமை தாங்கி உலகக்கோப்பையை கைப்பற்றி கொடுத்த பின்னர் 2008 ஆம் ஆண்டு விரைவில் இந்திய அணிக்கு இடம் பிடித்து விளையாட துவங்கி தற்போது வரை விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் அறிமுகமான காலத்திலிருந்து கோலி தொட்ட உயரத்தை நாம் பார்த்து வருகின்றோம். ஆனால் ஆரம்ப காலத்தில் கோலி தனது உடற் தகுதியில் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை.

Kohli 3

- Advertisement -

2009 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை கொஞ்சம் தசைப்பிடிப்புடன் உடல் பருமனாக காணப்பட்ட கோலி பின்னர் 2012ஆம் ஆண்டு முதல் தனது உடல் தகுதியில் பெரிய அளவில் மாற்றம் செய்தார். தனது ஆட்டத்திற்கும், உடற்தகுதிக்கும் இடையே உள்ள தொடர்பினை அவர் புரிந்து கொண்டதால் அவரது இந்த மாற்றத்தினை செய்தார். அதிலிருந்து பெரிய அளவில் கவனம் செலுத்தி கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் திகழ்ந்து வருகிறார்.

மேலும் அவர் இவ்வாறு கட்டுக்கோப்பான உடற்தகுதிக்கு மாறிய பின்னர் அவரது பேட்டிங்கிலும் பெரிய அளவில் அந்த மாற்றம் வெளிப்பட்டது. நீண்ட நேரம் கோலி எந்தவித தொந்தரவும் இல்லாமல் பேட்டிங் செய்து வருகிறார். மேலும் களத்தில் கோலி சோர்வு அடைவதை நாம் பார்க்க முடியவில்லை. ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு ரன்களையும், 2 ரன்கள் எடுக்க வேண்டிய இடத்தில் மூன்று ரன்களையும் மிக விரைவாக கோலி அசால்டாக ஓடுகிறார்.

kohli 4

மேலும் பீல்டிங் செய்தாலும் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அந்த அளவிற்கு தனது உடலை பிட்டாக வைத்திருக்கும் கோலி தொடர்ச்சியாக தனது உடற்பயிற்சிகள் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தும் கவனம் எடுத்து அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் இந்திய அணி நிர்வாகமும் வீரர்கள் தேர்வில் யோயோ டெஸ்ட் என்ற உடற்தகுதி தேர்வினை முக்கிய கட்டுப்பாடாக வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது கோலி எந்த வயது வரை விளையாடுவார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : உடல் ரீதியாக கோலி பிட்டானவர். அவர் மேலும் மிகவும் ஒழுக்கமானவர் தற்போது அவர் 30 வயதின் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளார். அவர் சாதாரணமாக இன்னும் ஐந்து ஆறு ஆண்டுகள் விளையாடலாம்.

Kohli

மேலும் அவர் விருப்பப்பட்டால் இன்னும் 10 ஆண்டுகள் வரை அவரால் விளையாட முடியும். அதற்கான உடல் ரீதியான தகுதியும், மனரீதியான தகுதியும் கூட கோலியிடம் உள்ளது. ஒருமுறை முடிவு செய்து விட்டால் அதிலிருந்து பின்வாங்காத குணம் கோலியிடம் உள்ளது. அதனால் தனது 40 ஆவது வயது துவக்கம் வரை அவர் கிரிக்கெட் விளையாடும் அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என்றும் தீப் தாஸ்குப்தா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement