நண்பனுக்காக ரஷீத் கான் செய்த செயல் ! நெகிழ்ச்சியில் ரசிகர்கள் ! என்ன செய்தார் தெரியுமா ?

ஆட்டநாயகன் விருது பெற்ற ரஷீத்கான் உடலநலம் சரியில்லாத தனது நண்பனின் மகனுக்கு சமர்பித்து நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

rashid khan

11வது ஐபிஎல் சீசனின் 7வது லீக்போட்டி நேற்று ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதின.

- Advertisement -

நேற்றைய போட்டியிலும் ஹைதராபாத் அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது. ரோகித்சர்மா தலைமையில் வலுவான அணியாக மும்பை அணி இருந்தாலும் நேற்றைய போட்டியிலும் தோல்வியை தழுவி மும்பை அணி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கெதிராக ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான் அபாரமாக பந்துவீசி ஆட்டநாயகன் விருதினை தட்டிச்சென்றார்.

நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்களை பந்துவீசி வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். நேற்றைய போட்டிகளில் அதிக டாட் பந்துகளை வீசி மும்பை அணியினரை கட்டுப்படுத்தினார்.

- Advertisement -

crickter rashid khan

ஆட்டநாயகன் விருதுபெற்றபின் பேசிய ரஷீத்கான் “நேற்றைய போட்டிகளில் திட்டமிட்டபடியே பந்துவீசினேன்.
நேற்றைய போட்டிகளில் சரியான இடத்தில் பந்துகளை வீசி எதிரணியினரை திணறடிக்க செய்தேன். டி20 போட்டிகளில் டாட் பந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நான் வீசிய பந்துகளும் நன்றாக சுழன்றன.

நான் சிறப்பாக பந்துவீசியதால் எனக்கு இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை நான் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ள என்னுடைய நண்பனின் மகனுக்காக சமர்பிக்கின்றேன்” என்றார்.

Advertisement