ஐபிஎல் 2022 தொடரில் 10+ கோடி வாங்கிய வீரர்களின் செயல்பாடுகள். எப்படி இருந்தது? – ஒரு அலசல்

Advertisement

கலை கட்டியுள்ள ஐபிஎல் 2022 தொடரில் சென்னை – மும்பை போன்ற வெற்றிகரமான அணிகள் ஆரம்பத்திலேயே சந்தித்த தொடர் தோல்விகளால் முதல் அணிகளாக வெளியேறிய நிலையில் ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளும் தேவையான வெற்றிகளை பெறத் தவறியதால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறினேன். மறுபுறம் ஆரம்பம் முதலே வெற்றி நடை போட்டு தேவையான வெற்றிகளை ருசித்த குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு சென்றுள்ளன.

IPL 2022

முன்னதாக இந்த வருடம் புதிய 2 அணிகள் உருவாக்கப்பட்டதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. பெங்களூருவில் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெற்ற அந்த ஏலத்தில் நட்சத்திர வீரர்களை பல கோடி ரூபாய் செலவழித்து வாங்குவதற்கு அனைத்து அணிகளும் போட்டியிட்டன. அதில் ஒருசில வீரர்கள் 10 கோடி என்ற பெரிய தொகையையும் தாண்டி ஏலம் போனார்கள். தற்போது ஐபிஎல் தொடரின் 94% போட்டிகளான லீக் சுற்று முடிந்துள்ள நிலையில் 10 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளில் வாங்கப்பட்ட வீரர்கள் (தக்க வைக்கப்படாமல் வாங்கப்பட்ட வீரர்கள்) அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்களா என்பதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. கேஎல் ராகுல் 17 கோடி: ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக தொகைக்கு விளையாடும் வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்த நட்சத்திரம் கேஎல் ராகுல் இதுவரை பங்கேற்ற 14 போட்டிகளில் 3 அரை சதங்கள் 2 சதங்கள் உட்பட 537* ரன்களை எடுத்துள்ளார்.

Rahul

கேப்டனாகவும் தன்னிடம் நம்பிக்கை ஒடுக்கப்பட்ட பொறுப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு முதல் சீசனிலேயே ப்ளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வகையில் 17 கோடிக்கு சிறப்பாக செயல்பட்டு உள்ளார் என்றே கூறலாம்.

- Advertisement -

2. இஷான் கிசான் 15.25 கோடி: கடந்த சீசன்களில் மிரட்டலாக பேட்டிங் செய்து இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு உருவெடுத்த இஷான் கிஷனை 15.25 கோடி என்ற பெரிய தொகைக்கு மீண்டும் மும்பை அணி நிர்வாகம் போட்டி போட்டு வாங்கியது. ஆனால் அதன் காரணமாக மேலும் சில தரமான வீரர்களை வாங்கும் வாய்ப்பை கோட்டை விட்ட அந்த அணிக்கு இவரும் பங்கேற்ற 14 போட்டிகளில் 3 அரை சதங்கள் உட்பட 418 ரன்களை 120.11 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து பெரிய அளவில் கைகொடுக்க தவறினார்.

MI vs RR Ishan Kishan

15.25 கோடி என்ற தொகை அவருக்கு சிறப்பாக செயல்பட்டே தீரவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுத்தது. மேலும் அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதால் 800 ரன்கள் அடிக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பெரும்பாலும் டெஸ்ட் இன்னிங்ஸ் போல மெதுவாக அவர் ஆடியது மும்பையின் 8 தொடர் தோல்விகளுக்கு பங்காற்றியது ரசிகர்களான நீங்களே அறிவீர்கள் என்ற வகையில் 15 கோடிகளுக்கு இஷான் கிசான் சிறப்பாக செயல்படவில்லை என்பதே நிதர்சனம்.

- Advertisement -

3. ஷ்ரேயஸ் ஐயர் 12.25 கோடி: பஞ்சாப், பெங்களூர் ஆகிய அணிகளுக்கிடையே போட்டி போட்டு வாங்கி கேப்டனாக நியமித்த கொல்கத்தாவுக்கு பேட்டிங்கில் 14 போட்டிகளில் 401 ரன்களை 134.56 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் குவித்த அவர் முடிந்த சிறப்பாக செயல்பட்ட போதிலும் அணி நிர்வாகம் தேர்வுக்குழுவில் தலையிட்டதால் கேப்டனாக பெரிய அளவு வெற்றி பெற்று கொடுக்க முடியவில்லை.

Hardik Pandya vs RCB

4. ஹர்டிக் பாண்டியா 15 கோடி: முதல் முறையாக அனுபவமில்லாத கேப்டன்சிப் பொறுப்பில் 15 கோடி என்ற பெரிய தொகையில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 13 போட்டிகளில் 413* ரன்களை எடுத்ததுடன் முதல் வருடத்திலேயே பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வகையில் அவர் அசத்தியுள்ளார்.

- Advertisement -

5. ரசித் கான் 15 கோடி: ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ரசித் கான் இந்த முறையும் 14 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 6.95 என்ற சிறப்பான எக்கனாமியில் வீசி குஜராத்தின் வெற்றிகரமாக செயல்பட்டு வாங்கிய சம்பளத்திற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

Harshal

6. ஹர்ஷல் படேல் 10.75 கோடி: கடந்த வருடம் ஊதா தொப்பியை வென்ற இவர் முறை மீண்டும் பெங்களூருவுக்காக 13 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 7.68 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து தனது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார்.

7. நிக்கோலஸ் பூரன் 10.75 கோடி: கடந்த வருடம் பஞ்சாப்புக்காக 5 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த நிக்கோலஸ் பூரனை பெரிய தொகைக்கு ஹைதராபாத் வாங்கிய நிலையில் 14 போட்டிகளில் 306 ரன்கள் 144.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தாலும் பெரிய ரன்கள் எடுக்க தவறிய அவர் சுமாராகவே செயல்பட்டுள்ளார்.

Thakur

8. ஷார்துல் தாகூர் 10.75: கடந்த வருடம் சென்னையில் அசத்திய ஷர்துல் தாகூர் இம்முறை டெல்லிக்காக 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 9.78 என்ற எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கியதுடன் பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டார்.

9. வணிந்து ஹஸரங்கா 10.75 கோடி: இலங்கையின் சுழல்பந்து வீச்சாளரான இவரை மீண்டும் பெரிய தொகைக்கு பெங்களூர் வாங்கிய நிலையில் 14 போட்டிகளில் 24 விக்கெட்களை 7.38 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் அபாரமால செயல்பட்டுள்ளார்.

10. 10 கோடிக்கு ராஜஸ்தானுக்காக வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பிரஸித் கிருஷ்ணா 14 போட்டிகளில் 15 விக்கெட்களை 8.16 என்ற எக்கனாமியில் எடுத்து ஓரளவு சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

11. நியூசிலாந்தின் லாக்கி பெர்குசனை 10 கோடிக்கு குஜராத் வாங்கிய நிலையில் 12 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை 9.06 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் அவரது தரத்திற்கு சுமாரை விட குறைவாகவே செயல்பட்டுள்ளார்.

Liam Livingstone

12. பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்றாலும் 11.5 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்தின் லியம் லிவிங்ஸ்டன் 14 போட்டிகளில் 437 ரன்களை 182.08 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து கணிசமான விக்கெட்டுகளையும் சாய்த்து வாங்கிய சம்பளத்துக்கு அட்டகாசமாக செயல்பட்டுள்ளார்.

13. 10 கோடிக்கு வாங்கப்பட்ட இளம் இந்திய பவுலர் அவேஷ் கான் லக்னோவுக்காக 12 போட்டிகளில் 17 விக்கெட்களை 8.51 என்ற எக்கனாமியில் எடுத்து பாராட்டும் அளவிற்கு செயல்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : இந்த வருஷம் ஐ.பி.எல் கோப்பையை அவங்கதான் ஜெயிக்கனும். அதுதான் என் ஆசை – சுரேஷ் ரெய்னா விருப்பம்

14. 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் காயத்தால் விலகியது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது.

Advertisement