இவர் இல்லாமல் சென்னை அணி எப்படி இந்தத்தொடரை சமாளிக்க போகுதோ – டீன் ஜோன்ஸ் வருத்தம்

Jones
- Advertisement -

மிகப் பெரும் எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான பதிமூன்றாவது சீசன் ஐபிஎல் டி20 தொடர் நாளை துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட இருக்கிறது. அபுதாபியில் நடைபெற இருக்கும் இந்த போட்டி நாளை இரவு சரியாக 7.30 மணிக்கு தொடங்குகிறது.

CskvsMi

- Advertisement -

இந்த போட்டியை சிஎஸ்கே வெற்றியுடன் துவங்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் தோனி கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து களமிறங்கும் அதன் காரணமாக இந்தப் போட்டியில் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எதிரி உள்ளது. சிஎஸ்கே அணி துபாய் சென்றதில் இருந்து இப்போது வரை அணியில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகள் பயிற்சிகள் என பல்வேறு புகைப்படங்களை சிஎஸ்கே அணி நிர்வாகத்தினர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரெய்னா இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய அளவில் கவலை அளிப்பதாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளரும் ஆன டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

Raina

இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறுகையில் : ‘‘இந்த நேரத்தில் ரெய்னா இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் உள்ளார். அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன். சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடுவார். அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால், அது சிஎஸ்கே அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.

raina

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடது கை பேட்ஸ்மேன்கள தேவை. அல்லது லெக்-ஸ்பின்னரை சிறப்பாக விளையாட வேண்டும். இதனால் சென்னை அணி சாம் கரன், ஜடேஜா, வெயினி் பிராவோ ஆகியோரை கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். வாட்சன், எம்எஸ் டோனி நீண்ட நேரம் களத்தில் நிற்கமாட்டார்கள்.’’ என்று கூறியுள்ளார் டீன் ஜோன்ஸ்.

Advertisement