தோனியின் ஆட்டத்தை காண வெறித்தனமாக காத்திருக்கிறேன் – வியந்து பேசிய ஆஸி முன்னாள் வீரர்

Dhoni
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த 13 ஆவது ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக பலமுறை தள்ளிவைக்கப்பட்டு இறுதியில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் நடைபெற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி இந்த தொடர் துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பல மடங்கு எகிறி உள்ளது.

Dhoni

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம் யாதெனில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டாக விளையாடாத இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தோனி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது களமிறங்குகிறார் எனவே அவரின் ரசிகர்கள் அதனை காண ஆர்வமாக உள்ளனர். மேலும் உலக கோப்பை அரையிறுதிக்குப் பின்னர் இந்திய அணியில் இணையாத தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப ஐபிஎல் தொடரில் ஒரு வாய்ப்பு என்பதால் இந்த தொடரில் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் காண பயிற்சி முகாமில் மார்ச் மாதத் துவக்கத்திலேயே சென்னை வந்து கலந்து கொண்ட தோனி கொரோனா வைரஸ் காரணமாக ராஞ்சி திரும்பினார். மேலும் அவரின் கிரிக்கெட் எதிர்காலத்தை கணிக்கும் முக்கிய தொடராக இந்த தொடர் பார்க்கப்படுவதால் முன்னதாகவே தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயிற்சியை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jones-1

இந்நிலையில் தற்போது தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவதை காண ஆவலுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளரான இவர் தோனி குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : தோனியின் மிகப்பெரிய ரசிகன் நான். இந்தியாவின் சிறந்த ஆறு கிரிக்கெட் வீரர்கள் யார் என்று எடுத்துக்கொண்டால் எக்காலத்திலும் அதில் தோனி இருப்பார்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவரை தவிர வேறு யாரும் மீதும் கவனம் வைக்க தேவையில்லை. அப்படி அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டால் அடுத்த உலகக் கோப்பைக்கு கண் வைத்து விட்டார் என்றுதான் அர்த்தம் என தெரிவித்துள்ளார். மேலும் தோனி குறித்து பேசுகையில் : அவர் இப்போதும் சிறப்பாக செயல்படுகிறார் என்று நான் நினைக்கிறேன்.

Dhoni 1

ரசிகர்களை எப்போதும் ஆர்வத்துடன் வைத்திருக்கும் தோனி அவரின் அவர்களின் ஆசையை பூர்த்தி செய்து ஒரு சிறந்த வீரராக நிச்சயம் ஜொலிப்பார் என்று கூறியுள்ளார். ஒரு முறை பாகிஸ்தான் பிரதமர் முஷாரப் கூட தோனியின் ஹேர் ஸ்டைல் குறித்து பேசினார். பிரதமரும், அதிபரும் கூட டோனியை பற்றி பேசுகிறார்கள் அத்தனை எளிதில் தோனி அனைவரையும் வசீகர படுத்துகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement