காயத்தால் விலகிய பவுமாவால் தனது கடைசி போட்டியில் விளையாடும் டீன் எல்கருக்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ

Bavuma-and-Elgar
- Advertisement -

கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்கிய இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும்போதே தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்த போதும் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. பின்னர் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடும்போதும் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை.

அதனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் சரியாக இன்னும் இரண்டு வாரங்கள் வரை ஆகும் என்பதால் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கான கேப்டனாக மீண்டும் டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 36 வயதாகும் டீன் எல்கர் தென்னாப்பிரிக்க அணிக்காக கடந்த 2012-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 85 போட்டிகளில் விளையாடி 5331 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் கூட 185 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.

இதையும் படிங்க : இருக்கும் வேதனைல இது வேறையா.. ஐசிசி வழங்கிய முக்கிய தண்டனை.. இந்தியாவுக்கு மெகா பின்னடைவு

தனது கரியரின் கடைசி தொடராக இந்த இந்திய தொடரில் விளையாடி வரும் டீன் எல்கர் தற்போது பவுமாவிற்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டனாகவே விளையாடி அந்த போட்டியுடன் விடைபெற இருப்பது தென்னாப்பிரிக்க ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement