IPL 2023 : அட என்னப்பா இது? தோனி, வார்னரை வைத்து வித்தியாசமான பதிவை வெளியிட்ட – டெல்லி நிர்வாகம்

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி முன்னேறி வருகிறது. இந்நிலையில் இன்று இரவு நடைபெற இருக்கும் 55-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத இருப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்வப்பு தமிழக ரசிகர்கள் மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

அதோடு இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட சென்னை அணி பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பினை பிரகாசப்படுத்திக் கொள்ளும் என்பதனால் இந்த போட்டி சென்னை அணிக்கு முக்கியமான ஒரு போட்டியாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் டெல்லி அணி புள்ளி பட்டியலில் மேலும் முன்னேற்றத்தை காணும் என்பதால் அவர்களுக்கும் இந்த போட்டி முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டி இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7.30 மணிக்கு துவங்க உள்ள வேளையில் தற்போது டெல்லி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டிக்கு முன்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவில் :

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : திலக் வர்மாவை போல மும்பைக்கு கிடைத்த மற்றொரு இளம் புயல் – அதிரடி சிக்ஸரால் புதிய காரை நொறுக்கி மிரட்டல்

தோனி மற்றும் வார்னர் ஆகியோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு : “வணக்கம் வாழவைக்கும் சென்னை”, “இன்னைக்கு மேட்சுக்கு ரெடியா?” என தமிழில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement