டெல்லி கேபிட்டல்ஸ் அணி அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பே இல்ல – நட்சத்திர வீரர் மருத்துவமனையில் அனுமதி

KKR vs DC
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகெங்கிலும் பரவி வந்த கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நடத்தப்பட்டது. இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை முற்றிலுமாக இந்தியாவில் நடத்த வேண்டும் என்று தங்களது கோரிக்கைகளை சமூகவலைத்தளம் வாயிலாக முன்வைத்தனர்.

IPL 2022 (2)

அதன் காரணமாக தீவிர ஆலோசனையில் இறங்கிய பிசிசிஐ-யானது சரியான திட்டமிடலுடன் கூடிய அட்டவணைகளை வகுத்து இந்த ஐபிஎல் தொடரை நடத்தி வருகிறது. இந்த பதினைந்தாவது ஐபிஎல் சீசனானது கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குறைந்தபட்ச பார்வையாளர்களுடன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

கொரோனா இன்னும் முற்றிலுமாக நீங்காததன் காரணமாக மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களை சுற்றி நான்கு மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெறுவதில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் பேட்டரிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

Mitchell Marsh

அதனைத்தொடர்ந்து வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் டெல்லி அணியை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிச்செல் மார்ஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு சேர்த்து டெல்லி அணியின் மருத்துவர் மற்றும் மீடியா குழுவைச் சேர்ந்த ஒருவர் அதோடு 3 ஹோட்டல் ஊழியர்கள் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் டெல்லி அணி முற்றிலுமாக தற்போது தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. அதோடு மார்ஷ்க்கு பாதிப்பு சற்று அதிகமாக உள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : 2 வருடத்திற்கு பின் சதமடித்த புஜாரா! அசாருதீன், சங்கக்காரா சாதனை சமன் – மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு உறுதியா

இதன் காரணமாக டெல்லி அணி அடுத்ததாக விளையாடும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement