183 ரன்ஸ்.. விராட் கோலியை முந்தி ராகுல் அசத்தல் சாதனை.. 72% கோட்டை விடும் சிஎஸ்கே சேசிங் செய்யுமா?

KL Rahul vs CSK
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 17வது போட்டி நடைபெற்றது. அதில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜேக் பிரேசர் ஆரம்பத்திலேயே கலீல் அகமது வேகத்தில் டக் அவுட்டானார்.

இருப்பினும் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் வந்த அபிஷேப் போரெல் தமது பங்கிற்கு அதிரடி காட்ட முயற்சித்த போது 33 (20) ரன்னில் ஜடேஜா சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த கேப்டன் அக்சர் பட்டேல் அதிரடியான ஆட்டத்தை துவங்கிய போது 21 (14) ரன்னில் நூர் அஹ்மத் சுழலில் போல்ட்டானார்.

- Advertisement -

சென்னை தடுமாற்ற ஃபீல்டிங்:

மறுபுறம் தொடர்ந்து அசத்திய ராகுல் அரை சதத்தை அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் கைகோர்க்க முயற்சித்த சமீர் ரிஸ்வி 20 (15) ரன்னில் கலீல் அஹ்மத் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ராகுல் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 76 (51) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார். இறுதியில் திரிஷ்டன் ஸ்டப்ஸ் 24* (12) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் டெல்லி 183-6 ரன்கள் எடுத்தது.

சென்னை அணிக்கு அதிகபட்சமாக கலீல் அகமது 2 விக்கெட்டுகளை சாய்த்தார். ஒரு கட்டத்தில் ராகுல் அதிரடியால் டெல்லி 200 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 18, 20வது ஓவரில் சிறப்பாக பவுலிங் செய்த பதிரனா 6, 7 ரன்கள் மட்டுமே கொடுத்து டெல்லியை ஓரளவு மடக்கினார். அதே சமயம் இந்தப் போட்டியிலும் சென்னை அணியின் ஃபீல்டிங் சுமாராகவே இருந்தது.

- Advertisement -

ராகுல் அசத்தல்:

இந்த வருடம் மட்டும் சென்னை அணி மொத்தம் 7 கேட்ச்களை 72.0 என்ற சதவீதத்தில் கோட்டை விட்டுள்ளது. அதன் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் அதிக சராசரியில் கேட்ச்களை தவற விட்ட அணிகளின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. இது ஒரு புறமிருக்க 2018க்குப்பின் சென்னை அணி ஒரு முறை கூட 180 ரன்களை வெற்றிகரமாக துரத்தியதில்லை.

இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்ஸான அடிதடி.. வெளிநாட்டு ரசிகர்களை வெறியுடன் அடிக்கச் சென்ற பாகிஸ்தான் வீரர்.. காரணம் என்ன?

அதனால் இந்தப் போட்டியில் சென்னை வெல்லுமா என்ற கலக்கத்துடன் சிஎஸ்கே ரசிகர்கள் சேசிங்கை பார்த்து வருகிறார்கள். இந்தப் போட்டியில் அடித்த 76 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கான சாதனைப் பட்டியலில் விராட் கோலியை முந்தியுள்ள கேஎல் ராகுல் முதலிடம் பிடித்துள்ளார். அந்த பட்டியல்:
1. கேஎல் ராகுல்: 48.96
2. விராட் கோலி: 45.86
3. ருதுராஜ் கெய்க்வாட்: 44.01
4. கிறிஸ் கெயில்: 41.86
5. ஜோஸ் பட்லர்: 41.70

Advertisement