- Advertisement -
ஐ.பி.எல்

86 ரன்ஸ்.. இதுக்கு 1 நிமிடம் தானா? கொதித்த சாம்சன்.. வெற்றியை மாற்றிய சுமாரான அம்பயரிங்.. ரசிகர்கள் விளாசல்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் 56வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்கள் அபிஷேக் போரல் மற்றும் ஜேக் பிரேசர்-மெக்குர்க் ஆகியோர் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் பவுலர்களை பந்தாடினர்.

அதில் 7 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட ஜேக் வெறும் 19 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு மிரட்டலை கொடுத்த போது அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த சாய் ஹோப் 1 ரன்னில் ரன் அவுட்டாகி சென்ற நிலையில் அதற்கடுத்ததாக வந்த அக்சர் பட்டேல் 15 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அபாரமாக விளையாடி அபிஷேக் போரல் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 65 (36) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

சுமாரான அம்பயரிங்:
அடுத்ததாக வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 15 ரன்னில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ட்ரிஷன் ஸ்டப்ஸ் 41 (20) ரன்கள் விளாசினார். அதனால் 20 ஓவரில் டெல்லி 221/8 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 222 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். ஆனால் அவருடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 19 (17) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த ரியான் பராக் நிதானமாக விளையாட முயற்சித்து 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் அரை சதமடித்து வெற்றிக்காக போராடினார். அதே வேகத்தில் சதத்தை நெருங்கிய அவர் வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 86 (46) ரன்களில் அவுட்டானார். குறிப்பாக முகேஷ் குமார் வீசிய 16வது ஓவரின் 4வது பந்தில் அவர் அடித்த சிக்சரை ஷாய் ஹோப் பவுண்டரி எல்லையில் நின்று பிடித்தார்.

அப்போது அவருடைய கால்கள் பவுண்டரி எல்லையில் பட்டது போல் தெரிந்தால் நடுவரிடம் சஞ்சு சாம்சன் வாதிட்டார். ஆனால் அதை 1 நிமிடம் கூட முழுமையாக சோதிக்காமல் 3வது நடுவர் அவுட் கொடுத்ததால் சஞ்சு சாம்சன் ஏமாற்றத்துடன் சென்ற நிலையில் ராஜஸ்தான் ரசிகர்கள் அது அவுட்டில்லை என்று வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அடுத்த சில ஓவரில் சாதாரண ஒய்ட் பந்தை 3 நிமிடம் வரை 3வது நடுவர் சோதித்ததை பார்த்த ரசிகர்கள் “இதெல்லாம் ஒரு அம்பயரிங்கா?” என்று விளாசி வருகின்றனர்.

இதையும் படிங்க: டி20 உலககோப்பையில் விளையாட இருப்பதன் மூலம் ரோஹித் சர்மா படைக்கவுள்ள மாபெரும் சாதனை – விவரம் இதோ

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சுபம் துபே 25 (12), ரோவ்மன் போவல் 13 (10) ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார்கள். அதனால் 20 ஓவரில் ராஜஸ்தானை 201/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய டெல்லி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கலீல் அகமது, முகேஷ் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -