- Advertisement -
ஐ.பி.எல்

30/3 டூ 169/4.. டெல்லியை தூக்கி வெற்றி பெற வைத்த ராகுல்.. சொந்த மண்ணில் ஆர்சிபி மோசமான சாதனை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதி பெங்களூருவில் 24வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களம் இறங்கிய பெங்களூரு தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 163-7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் அடித்து நொறுக்கி 37 (17) ரன்கள் எடுத்த போது துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

மறுபுறம் அதிரடிக் காட்ட முயற்சித்த விராட் கோலி 22 (14) ரன்னில் அவுட்டானார். ஆனால் மிடில் ஆர்டரில் படிக்கல் 1, கேப்டன் ரஜத் படிதார் 25, லிவிங்ஸ்டன் 4, ஜிதேஷ் சர்மா 3, க்ருனால் பாண்டியா 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 150ன்கள் தாண்டாது என்று நினைக்கப்பட்ட அந்த அணிக்கு கடைசி நேரத்தில் டிம் டேவிட் 37* (20) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

ராகுல் அபாரம்:

டெல்லிக்கு அதிகபட்சமாக விப்ராஜ் நிகாம் 2, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய டெல்லிக்கு டு பிளேஸிஸ் 2, ஜேக் பிரேசர் 7, அபிஷேக் போரேல் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 30/3 என தடுமாறிய டெல்லிக்கு கேஎல் ராகுல் நிதானமாக விளையாடினார்.

ஆனால் கேப்டன் அக்சர் படேல் 15 (11) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 58/4 என மீண்டும் தடுமாறிய டெல்லிக்கு மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ராகுல் அரை சதத்தை அடித்து வெற்றிக்கு போராடினார். அவருடன் திரிஷ்டன் ஸ்டப்ஸ் 38* (23) ரன்கள் அடித்து கை கொடுத்தார்.

- Advertisement -

பெங்களூரு மோசம்:

அதைப் பயன்படுத்திய ராகுல் மறுபுறம் தொடர்ந்து அபாரமாக விளையாடி 93* (53) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 17.5 ஓவரில் 169-4 ரன்கள் எடுத்த டெல்லி தங்களுடைய 4வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தது. அதனால் பெங்களூருவுக்கு அதிகபட்சமாக புவனேஸ்வர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் 2வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: 2005இல் நான் பாத்த தோனிக்கு இதான் கரெக்ட்.. இந்த வாய்ப்பில் ஃபீஸ்ட் மாதிரி அசத்துவாரு.. கங்குலி நம்பிக்கை

இதையும் சேர்த்து தங்களுடைய சொந்த ஊரான பெங்களூருவில் இருக்கும் எம் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி 45 தோல்விகளை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக தோல்விகளைப் பெற்ற அணி என்ற மோசமான வரலாறுகளை பெங்களூரு படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1. பெங்களூரு : 45* (எம் சின்னசாமி, பெங்களூரு)
2. டெல்லி: 44 (அருண் ஜெட்லீ, டெல்லி)
3. கொல்கத்தா: 38 (ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா)

- Advertisement -