ரிஷப் பண்ட் அதிரடி.. முடித்த 22 ஆஸி வீரர்.. 13 வெற்றிகள்.. லக்னோவின் வீரநடைக்கு முற்றுப்புள்ளி வைத்த டெல்லி

LSG vs DC 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோ நகரில் 26வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த குவிண்டன் டீ காக்’கை 19 ரன்களில் அவுட்டாக்கிய கலீல் அகமத் அடுத்ததாக வந்த தேவதூத் படிக்களை 3 ரன்களில் காலி செய்தார்.

இருப்பினும் எதிர்புறம் கேப்டன் கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடினார். ஆனால் மறுபுறம் வந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸை 8 (10) ரன்களில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரானை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அதோடு நிற்காத எதிர்புறம் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுலையும் 39 (22) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

டெல்லி அசத்தல்:
அப்போது வந்த தீபக் ஹூடா 10, க்ருனால் பாண்டியா 3 ரன்களில் அவுட்டானதால 94/7 என திணறிய லக்னோ 13 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது இளம் வீரர் ஆயுஷ் படோனி அபாரமாக விளையாடி 5 பவுண்டரி 1 சிக்சருடன் 55* (35) ரன்கள் குவித்து மூழ்கிய லக்னோவை ஓரளவு காப்பாற்றினார்.

அவருடன் அர்சத் கான் 20* (16) ரன்கள் எடுத்ததால் தப்பிய லக்னோ 20 ஓவரில் 167/7 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3, கலீல் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 168 ரன்களை துரத்திய டெல்லிக்கு தடுமாற்றமாக விளையாடிய டேவிட் வார்னர் 8 (9) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பிரித்திவி ஷா அதிரடியாக விளையாடி 32 (22) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ரிசப் பண்ட் மற்றும் ஜேக் பிரேசர்-மெக்குர்க் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதில் க்ருனால் பாண்டியா வீசிய 13வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட 22 ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர் டெல்லியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து தனது முதல் ஐபிஎல் அரை சதமடித்து 55 (35) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவரில் மறுபுறம் 3வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரிசப் பண்ட் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41 (24) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 15* (9), ஷாய் ஹோப் 11* (10) ரன்கள் அடித்ததால் 18.1 ஓவரில் 170/4 ரன்கள் எடுத்த டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பெற்றது. அதனால் ரவி பிஸ்னோய் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் லக்னோ தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: 32 நாள் அவரு பட்ட கஷ்டத்தை பாத்து இருக்கேன்.. அதுக்கு அப்புறம் செம கம்பேக் குடுத்தாரு – மைக் ஹஸ்ஸி ஓபன்டாக்

இதன் வாயிலாக முதல் முறையாக ஐபிஎல் தொடரில் 160+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ பரிதாபமாக தோற்றது. இதற்கு முன் 13 போட்டிகளில் 160+ ரன்களை கட்டுப்படுத்தி தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வந்த லக்னோவை இப்போட்டியில் தடுத்து நிறுத்திய டெல்லி முதல் தோல்வியை பரிசளித்துள்ளது.

Advertisement