வெறும் 1 விக்கெட்.. 65/5 டூ 210.. அசுடோஸ் அசாத்திய வெறியாட்டம்.. லக்னோவை வீழ்த்தி டெல்லி 8 வருட சாதனை வெற்றி

Ashutosh sharma
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 4வது போட்டியில் லக்னோ அணியை வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்து அற்புதமான வெற்றியைப் பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் 209-8 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 75 (30), மிட்சேல் மார்ஷ் 72 (36) ரன்களை அதிரடியாக எடுத்தார்கள். டெல்லி அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 2, மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள். அடுத்ததாக விளையாடிய டெல்லி அணிக்கு ஜேக் பிரேசர்-மெக்குர்க் 1, அபிஷேக் போரல் 0, சமீர் ரிஸ்வி 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

விழுந்த டெல்லி:

அதனால் 7/3 என ஆரம்பத்திலேயே டெல்லி திணறியது. அப்போது நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாட முயற்சித்த கேப்டன் அக்சர் படேல் 22 (11) டு பிளேஸிஸ் 29 (18) ரன்களில் அவுட்டானதால் 65-5 என மேலும் சரிந்த டெல்லி கண்டிப்பாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது இளம் இந்திய வீரர் அசுடோஸ் சர்மா அதிரடியாக விளையாடத் துவங்கினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த இளம் தென்னாபிரிக்க வீரர் ட்ரிஷன் ஸ்டப்ஸ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 34 (22) ரங்களையோ விளாசி சரிவை சரி செய்து பெவிலியன் திரும்பினார். அதற்கடுத்ததாக வந்த விப்ராஜ் நிகாம் தம்முடைய பங்கிற்கு மிரட்டலாக விளையாடி 5 பௌண்டரி 2 சிக்ஸருடன் 39 (15) ரன்கள் அடித்து திருப்புமுனையை உண்டாக்கி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சாதனை வெற்றி:

அதைப் பயன்படுத்திய அசுடோஸ் சர்மா டெத் ஓவர்களில் சுமாராக விளையாடி பவுலிங் செய்த லக்னோ பவுலர்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கினார். கடைசி நேரத்தில் ஸ்டார்க் 2, குல்தீப் யாதவ் 5 ரன்னில் அவுட்டானார்கள். அதற்கெல்லாம் அசராத அவர் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 66* (31) ரன்கள் குவித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார்.

அதன் காரணமாக 19.3 ஓவரில் 211-9 ரன்கள் எடுத்த டெல்லி 8 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரில் 200+ இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை வெற்றி பெற்றது. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் தங்களது அதிகபட்ச இலக்கை (210) வெற்றிகரமாக சேசிங் செய்து டெல்லி சாதனை படைத்தது. அதுபோக லக்னோவுக்கு எதிராக முதல் முறையாக 200+ ரன்களை வெற்றிகரமாக துரத்திய அணி என்ற வரலாற்றையும் டெல்லி படைத்தது.

இதையும் படிங்க: லக்னோ 209 ரன்ஸ்.. டக் அவுட்டான 27 கோடி பண்ட் 18, 12 வருட மோசமான சாதனை.. டெல்லியை பந்தாடிய பூரான், மார்ஷ்

மேலும் கொல்கத்தா (2015), சென்னை (2018), ஹைதராபாத் (2018), லக்னோ (2023) அணிகளுக்கு பின் 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற 5வது அணி என்ற சாதனையையும் டெல்லி படைத்தது. மறுபுறம் தாகூர் 2, மணிமாறன் சித்தார்த் 2, திக்வேஷ் ரதி 2, ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகள் எடுத்தும் ரிஷப் பண்ட் தலைமையில் வெற்றியை கோட்டை விட்டது.

Advertisement