லக்னோ 209 ரன்ஸ்.. டக் அவுட்டான 27 கோடி பண்ட் 18, 12 வருட மோசமான சாதனை.. டெல்லியை பந்தாடிய பூரான், மார்ஷ்

LSG vs DC 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நான்காவது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணிக்கு ஐடன் மார்க்ரம் 15 ரன்களில் அவுட்டானார்.

ஆனால் மற்றொரு துவக்க வீரர் மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரான் தம்முடைய பங்கிற்கு டெல்லி பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கினார். அதில் ஸ்டார்க்கை எடுத்து வாங்கிய மார்ஷ் அரை சதத்தை அடித்தார். அதே போல மறுபுறம் தம்முடைய ஸ்டைலில் தொடர்ந்து பட்டைய கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்திய பூரான் அரை சதத்தை கடந்தார்.

- Advertisement -

பண்ட் மோசமான சாதனை:

அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் மார்ஷ் 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 72 (36) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய பூரான் 6 பவுண்டரி 7 சிக்ஸருடன் 75 (30) ரன்கள் எடுத்த போது ஸ்டார்க் கிளீன் போல்ட்டாக்கினார். அடுத்ததாக வந்த கேப்டன் ரிசப் பண்ட் மிகவும் தடுமாற்றமாக விளையாடி 6 பந்தில் டக் அவுட்டானார்.

இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 2வது அதிக பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டான கேப்டன் என்ற மோசமான சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2008இல் டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டன் விவிஎஸ் லக்ஷ்மன், 2013இல் மும்பை கேப்டன் ரிக்கி பாண்டிங் முறையே கொல்கத்தா மற்றும் டெல்லிக்கு எதிராக இதே போல தலா 6 பந்துகள் எதிர்கொண்டு டக் அவுட்டானார்கள்.

- Advertisement -

வெற்றி யாருக்கு:

இந்த வருடம் 27 கோடி என்ற வரலாறு காணாத உச்சகட்ட தொகைக்கு வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் இப்படி முதல் போட்டியிலேயே டக் அவுட்டானது லக்னோ ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 27* (19) ரன்கள் எடுத்தார். ஆனால் ஆயுஸ் பதோனி 4, சர்துல் தாக்கூர் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இதையும் படிங்க: 2017 வீக்னெஸ் இன்னுமா மாறல.. அதை பாக்காம குருட்டுத்தனமா அடிக்கலாமா? ரோஹித் பற்றி ஸ்ரீகாந்த், வாட்சன்

இறுதியில் 20 ஓவரில் லக்னோ 209-8 ரன்கள் எடுத்தது. மறுபுறம் கடைசி 6.3 ஓவரில் மட்டும் 46 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்த டெல்லி ஓரளவு பந்து வீச்சில் அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisement