வெறும் 4 ரன்ஸ்.. போராடியாக ரசித், சாய் கிஷோர், மில்லர்.. சூப்பர்மேன் ஃபீல்டிங்கால் நூலிலையில் கைமாறிய வெற்றி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் தலைநகர் டெல்லியில் ஏப்ரல் 24ஆம் தேதி 40வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு துவக்க வீரர்கள் ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் 23 (14), பிரிதிவி ஷா 11 (7) ரன்களில் சந்திப் வாரியர் வேகத்தில் அவுட்டானார்கள்.

அதோடு நிற்காத சந்திப் வாரியர் அடுத்ததாக வந்த சாய் ஹோப்பையும் 5 ரன்னில் அவுட்டாக்கியதால் 44/3 என ஆரம்பத்திலேயே டெல்லி தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் ரிசப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் அதிரடியாக விளையாடிய ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் 17 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடிய இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லியை வலுப்படுத்தியது.

- Advertisement -

சூப்பர்மேன் ஃபீல்டிங்:
அப்போது அப்சர் பட்டேல் அரை சதமடித்து 5 பவுண்டரி 4 சிக்சருடன் 66 (43) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த ட்ரிஷன் ஸ்டப்ஸ் அதிரடியாக 26* (7) ரன்கள் குவித்து மிரட்டினார். அதே போல மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அபாரமாக பேட்டிங் செய்த கேப்டன் ரிஷப் பண்ட் 5 பவுண்டரி 8 சிக்சருடன் 88* (43) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் டெல்லி 224/4 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத் சார்பில் அதிகபட்சமாக சந்திப் வாரியார் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 225 ரன்களை துரத்திய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 6 (5) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக வந்த தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த ரிதிமான் சஹா 2வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 39 (25) ரன்கள் விளாசி அவுட்டானார். அப்போது வந்த ஓமர்சாய் 1 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய சாய் சுதர்சன் அரை சதமடித்து 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 65 (39) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ஆனால் அதற்கடுத்ததாக வந்த சாருக்கான் 8, ராகுல் திவாடியா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் 5வது இடத்தில் களமிறங்கி டெல்லி பவுலர்களைப் பிரித்து மேய்ந்த டேவிட் மில்லர் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 55 (23) ரன்கள் குவித்து குஜராத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த போது முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய தமிழக வீரர் சாய் கிஷோர் 2 சிக்சருடன் 13 (6) ரன்கள் குவித்து அவுட்டானதால் வெற்றி கேள்விக்குறியானது.

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக சி.எஸ்.கே வீரரை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்த – வீரேந்திர சேவாக்

ஆனால் அப்போது 19வது ஓவரின் 5வது பந்தில் ரசித் கான் அடித்த சிக்ஸரை பவுண்டரி எல்லையில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் சூப்பர்மேனை போல் தாவிப்பிடித்து 5 ரன்களை தடுத்தார். இறுதியில் முகேஷ் குமார் வீசிய கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட போது 4, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்த ரசித் கான் 21* (11) ரன்கள் அடித்தும் 20 ஓவரில் குஜராத்தை 220/8 ரன்கள் கட்டுப்படுத்திய டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதனால் ட்ரிஷன் ஸ்டப்ஸ் தடுத்த 5 ரன்கள் கடைசியில் டெல்லி 4 ரன்களில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக ரசிக் சலாம் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement