25 ரன்ஸ்.. தோனி – சங்கர் திணறல்.. சேசிங் பவர் இல்லாத சிஎஸ்கே.. டெல்லியிடம் 15 வருடம் கழித்து அவமானத் தோல்வி

CSK vs DC
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 17வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து தலைமிறங்கிய டெல்லிக்கு ஜேக் பிரேசர் ஆரம்பத்திலேயே டக் அவுட்டானார். அடுத்ததாக வந்த அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 33 (20) ரன்னில் அவுட்டானார்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் கேஎல் ராகுல் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் எதிர்புறம் அதிரடியாக விளையாடி கை கொடுக்க முயற்சித்த கேப்டன் அக்சர் படேல் 21 (14) ரன்களில் நூர் அஹ்மத் சுழலில் அவுட்டானார். அடுத்ததாக வந்த சமீர் ரிஸ்வி 20 (15) ரன்கள் எடுத்த போது
கலீல் அஹ்மத் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

சென்னை திணறல்:

மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராகுல் அரை சதத்தை அடித்து 77 (51) ரன்கள் விளாசி பதிரனா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 24* (12) ரன்களை அதிரடியாக எடுத்த உதவியுடன் 20 ஓவரில் டெல்லி 183-6 ரன்களை எடுத்தது. சென்னைக்கு அதிகபட்சமாக கலீல் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக களம் இறங்கிய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா 3 (6) ரன்னில் முகேஷ் குமார் வேகத்தில் அவுட்டானார். அடுத்ததாக வந்த கேப்டன் ருதுராஜ் 5 ரன்னில் ஸ்டார்க் வேகத்தில் நடையை கட்டினார். மறுபுறம் தடுமாறிய டேவோன் கான்வே 13 (14) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். போதாகுறைக்கு அடுத்ததாக வந்த சிவம் துபே 18, ரவீந்திர ஜடேஜா 2 ரன்னில் அவுட்டாகி மெகா அழுத்தத்தை உண்டாக்கினர்.

- Advertisement -

15 வருடம் கழித்து:

அதனால் 74-5 என ஆரம்பத்திலேயே சரிந்த சென்னைக்கு 4வது இடத்தில் களமிறங்கிய விஜய் சங்கருடன் தோனி ஜோடி சேர்ந்தார். விக்கெட்டை விடாமல் பாதுகாத்த இந்த ஜோடி பேட்டிங் செய்ய சவாலாக இருந்த பிட்ச்சில் அதிரடியாக விளையாடுவதற்கு திணறிறியது. அந்த வகையில் கடைசி வரை தடுமாற்றமாகவே விளையாடிய இந்த ஜோடியில் விஜய் சங்கர் 69* (54) ரன்கள் தோனி 30* (26) ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்யவில்லை.

அதனால் 20 ஓவரில் 158/5 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை 25 ரன்கள் வித்தியாசத்தில் 3வது தோல்வியை சந்தித்தது. மறுபுறம் 15 வருடங்கள் கழித்து சென்னையை அதனுடைய சொந்த ஊரான சேப்பாக்கத்தில் தோற்கடித்து டெல்லி சாதனை வெற்றி பெற்றது. கடைசியாக 2010ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் வென்ற டெல்லி இதையும் சேர்த்து இந்த வருடம் 3வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இதையும் படிங்க: 183 ரன்ஸ்.. விராட் கோலியை முந்தி ராகுல் அசத்தல் சாதனை.. 72% கோட்டை விடும் சிஎஸ்கே சேசிங் செய்யுமா?

அந்த அணிக்கு அதிகபட்சமாக விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். மறுபுறம் கடந்த போட்டியில் 17 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் பெங்களூருவிடம் தோற்ற சென்னை தற்போது 15 வருடங்கள் கழித்து டெல்லியிடம் மண்ணைக் கவ்வி அவமானத் தோல்விகளை சந்தித்துள்ளது.

Advertisement