சென்னை, பெங்களூருவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு சென்ற இளம் படை – வெளியான புள்ளிபட்டியல்

IPL
IPL Cup
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல்பாதி தற்போது முடிவடைந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடர் தற்போது ஒவ்வொரு அணிகளும் ஏழு போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளன. ஏற்கனவே 7 போட்டிகள் முடிவடைந்த நிலையில் சென்னை அணி முதலிடத்திலும், ஆர்சிபி அணி இரண்டாவது இடத்திலும், டெல்லி அணி 3-வது இடத்திலும் இருந்தது.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி அவர்களது எட்டாவது போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியும் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி அகர்வாலின் 99 ரன்கள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி சிறப்பாக விளையாடியது. பிரித்வி ஷா 36 ரன்களும், பண்ட் 14 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தவான் மட்டும் ஆட்டமிழக்காமல் 69 ரன்களை குவித்து டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

dcvspbks

17.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை அவர்கள் விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6 போட்டியில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். அதற்கு அடுத்ததாக சிஎஸ்கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் 7 போட்டிகளில் விளையாடிய தலா 5 வெற்றிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

dhawan

இதில் டெல்லி அணி கவனிக்கப்படவேண்டிய சுவாரசியமான விடயம் யாதெனில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் வந்தது மட்டுமின்றி ரன் ரேட்டையும் அவர்கள் கணிசமாக உயர்த்தி உள்ளனர். தற்போது டெல்லி அணியின் ரன் ரேட் 0.547 என்ற கணக்கில் உள்ளது. ஐயர் இல்லாமல் எப்படி டெல்லி அணி விளையாடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ரிஷப் பண்ட் தலைமையிலான இளம் படை தற்போது முதலிடத்தில் உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Advertisement