- Advertisement -
ஐ.பி.எல்

என்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேறல.. விராட் கோலியுடனான உறவு குறித்து – டேவிட் வார்னர் வருத்தம்

இந்திய அணிக்காக கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி இதுவரை 123 போட்டிகளில் விளையாடி 30 சதங்கள் மற்றும் 31 அரை சதங்கள் என 9230 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த அவர் எதிர்வரும் இங்கிலாந்து தொடரிலும் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

என்னோட ரொம்ப நாள் ஆசை இதுதான் : டேவிட் வார்னர்

ஆனால் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக தற்போது விராட் கோலி தனது 36-வது வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருந்தும் அவர் முன்கூட்டியே ஓய்வை அறிவித்தது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலியின் இந்த ஓய்வுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் வேளையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டேவிட் வார்னரும் விராட் கோலியுடனான தனது உறவு குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்க்கு சிறந்த தூதராக விராட் கோலி இருந்தார்.

நான் அவருக்கு எதிராக விளையாடி இருந்தாலும் அவரது அணுகுமுறை மற்றும் தன்னம்பிக்கை போன்ற பண்புகளை அதிகமாக மதிக்கிறேன். உண்மையில் என்னை கேட்டால் ஒரு முறையாவது நான் அவருடன் சேர்ந்து ஒரே அணியில் விளையாட வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் ஒருமுறை கூட என்னால் அவருடன் இணைந்து விளையாடும் வாய்ப்பை பெற முடியவில்லை.

- Advertisement -

அது எனது நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாகவே இருக்கும் என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நாங்கள் இளமையாக இருந்த போது ஒருவருக்கொருவர் எதிராக விளையாடிய முதல் ஆட்டத்தை எப்போதும் மறக்க மாட்டேன்.

இதையும் படிங்க : எங்க ராஜாவுக்கு நாங்க இருக்கோம்.. கிங் கோலியின் ஓய்வை மாஸாக கொண்டாட காத்திருக்கும் – ஆர்.சி.பி பேன்ஸ்

அந்தப் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வுபெறும் வரை தீவிரமான போட்டியாளராக களத்தில் முழு அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியவராக பார்க்கிறேன். விராட் கோலி களத்தில் கொண்டு வந்த எனர்ஜியை போன்று நான் வேறு எந்த வீரரிடமும் அவ்வளவு எனர்ஜியை பார்த்ததில்லை என டேவிட் வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -