எங்க ராஜாவுக்கு நாங்க இருக்கோம்.. கிங் கோலியின் ஓய்வை மாஸாக கொண்டாட காத்திருக்கும் – ஆர்.சி.பி பேன்ஸ்

Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக திகழ்ந்து வந்த அவர் கேப்டனாகவும் பல வரலாற்று வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.

விராட் கோலிக்கு மரியாதையை அளிக்கப்போகும் ஆர்.சி.பி ரசிகர்கள் :

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி பெற்ற பல்வேறு டெஸ்ட் தொடரின் வெற்றிகளுக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த கேப்டன் கோலி புது உத்வேகத்தையும் இந்திய அணிக்குள் கொண்டு வந்தவர். அப்படிப்பட்ட மகத்தான வீரரை பிசிசிஐ முறையாக வழி அனுப்பியிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்த வருகின்றனர்.

- Advertisement -

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர் மிகச் சிறந்த கேப்டனாகவும் திகழ்ந்திருக்கிறார். அதனால் அவருக்கு உரிய மரியாதை அளித்திருக்க வேண்டும் அதனை செய்யாமல் விராட் கோலிக்கு அழுத்தம் கொடுத்து அவர் ஓய்வை அறிவிக்க நிர்வாகமே காரணம் என்றும் பி.சி.சி.ஐ தங்களது தலைவருக்கு முறையான வழி அனுப்புதல் போட்டியை நடத்தி இருக்க வேண்டும் என்ற ஆதங்கங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிசிசிஐ அவரை முறையாக வழி அனுப்பவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எங்களது தலைவர் கிங் கோலிக்கு நாங்கள் மிகச் சிறப்பான கௌரவத்தை வழங்க காத்திருக்கிறோம் என ஆர்.சி.பி ரசிகர்கள் ஒரு புதிய முடிவை கையில் எடுத்துள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் மே 17-ஆம் தேதி ஆர்.சி.பி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போது அந்த போட்டியை நேரில் காணவரும் ஒவ்வொரு ரசிகர்களும் வெள்ளை நிற 18 ஆம் நம்பர் கொண்ட விராட் கோலி ஜெர்சி அணிந்து வரும்படியும், அப்படி முடியாதவர்கள் வெள்ளை நிற டி-ஷர்ட்டை அணிந்து வரவும் சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : ரிஸ்க் எடுத்து மொத்தமா இழந்துடாதீங்க.. கில் – பும்ராவில் அடுத்த கேப்டன் யார் என்பது பற்றி மொய்ன் அலி தேர்வு

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற விராட் கோலிக்கு சரியான பேர்வெல்லை நம்மால் வழங்க முடியும் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக வரும் 17-ஆம் தேதி சின்னசாமி மைதானம் முழுவதும் வெள்ளை நிற 18 ஆம் நம்பர் கொண்ட ஜெர்சியால் நிரம்பி வழியும். அப்படி நடக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய அளவில் கவனிக்கப்படும் விடயமாகவும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement