DC vs SRH : சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு. டெல்லி அணியின் கேப்டன் – டேவிட் வார்னர் அளித்த பேட்டி

David Warner
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது.

DC vs SRH

- Advertisement -

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 144 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்ததால் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

மிகச் சிறிய இலக்கினை துரத்திய சன் ரைசர்ஸ் அணியானது எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து இறுதியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றிக்குப் பிறகு டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது :

Markram

எப்போதுமே இங்கு வந்து விளையாடும் போது ரசிகர்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. அந்த ஆதரவிற்கு நன்றி இந்த போட்டியில் நிறைய சவால்கள் எங்களை நோக்கி வந்தன. இருந்தாலும் நாங்கள் இந்த போட்டியில் அதனை மிகச் சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளோம். பேட்டிங்கில் பெரிய அளவு ரன்களை குவிக்கவில்லை என்றாலும் பந்து வீச்சின் மூலம் நாங்கள் வெற்றி பெற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி.

- Advertisement -

முகேஷ் குமார் அழுத்தமான வேளையிலும் சிறப்பாக பந்து வீசினார். அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்களும் அருமையாக பந்து வீசினர். மொத்தத்தில் இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சே வெற்றிக்கு காரணம். இஷாந்த் சர்மா எப்பொழுதுமே நான் அணிக்காக விளையாட தயார் என்று என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட முடியவில்லை.

இதையும் படிங்க : வீடியோ : வெற்றிக்கு முன்பே கொண்டாடிய பாபர் அசாம், குறுக்கே வந்த சேப்மேன் – பி அணியிடம் மண்ணை கவ்விய பாகிஸ்தான்

தற்போது அவர் எங்களுக்காக விளையாடி வரும் வேளையில் அற்புதமான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். எங்களது அணி தற்போது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது நிச்சயம் அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றுவோம் என டேவிட் வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement