இலக்கு குறைவாக இருந்தும் நாங்கள் தோத்தது ரொம்ப வலிக்குது. தோல்விக்கு இதுவே காரணம் – வார்னர் வருத்தம்

Warner

ஐபிஎல் தொடரின் 43வது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்சை தீர்மானித்தார்.

KXIPvsSRH

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 32 ரன்களும், ராகுல் 27 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் பின்னர் இறுதிகட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக வார்னர் 35 ரன்களையும், விஜய்சங்கர் 26 ரன்களையும் குவித்தனர். இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது மட்டுமின்றி பிளே-ஆப் சுற்றுக்கு வாய்ப்பை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

kxip

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : இந்த தோல்வி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அவர்களை சுருட்டினார்கள். அதன் பிறகு நாங்கள் சிறப்பான துவக்கத்தை பேட்டிங்கில் பெற்றோம் ஆனால் அதனை அப்படியே நகர்த்திச் செல்ல எங்களால் முடியவில்லை. மைதானம் நேரம் ஆக ஆக சுழலுக்கு ஒத்திவைத்தது.

- Advertisement -

KXIP-1

இருப்பினும் இந்த போட்டியில் நாங்கள் இலக்கை எட்டியிருக்க வேண்டும். அதேபோன்று வெற்றி வாய்ப்புகள் இருந்தது ஆனால் அவர்கள் சிறப்பாக பந்து வீசி விட்டனர். முன்னர் நாங்கள் விக்கெட்டை இழக்காமல் இருந்தாலும் பிற்பாதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இந்த போட்டியின் அடைந்த தோல்வியை மறந்து நாங்கள் அடுத்த போட்டிக்கு செல்ல வேண்டும் என வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.