- Advertisement -
ஐ.பி.எல்

SRH vs KXIP : எனது தடைகாலத்தில் இவர்களின் உதவிதான் என்னை உண்மையான வீரராக மாற்றியது – வார்னர்

ஐ.பி.எல் தொடரின் 48 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் aவில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக வார்னர் 81 ரன்களும், மனிஷ் பாண்டே 36 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இதனால் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 167 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 79 ரன்களை அடித்தார். இதனால் ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் வார்னர் கூறியதாவது : நான் தடைக்காலத்தில் இருந்தபோது மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தேன். அப்போது எனது மனைவியும், குழந்தைகளுமே என்னை தேற்றினார்கள். இந்த தொடரில் நான் இவ்வளவு சிறப்பாக ஆடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இதேபோன்று ஆஸ்திரேலிய அணிக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாட உள்ளேன்.

என்னுடன் இந்த தொடரில் ஆடிய பேர்ஸ்டோ எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். எனது பேட்டிங்கில் உள்ள சிறு சிறு குறைகளை அவர் சுட்டிக்காட்டினார். ஆஸ்திரேலிய அணிக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளதால் இன்று நான் ஆஸ்திரேலியா செல்கிறேன் என்று வார்னர் கூறினார்.

- Advertisement -
Published by