நாங்க பேட்டிங்கை துவங்கியது நெனச்சது இதுதான். வெற்றிக்கு பிறகு ஆட்டநாயகன் டேவிட் வார்னர் – அளித்த பேட்டி இதோ

David-Warner
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்த 18-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது 2-ஆவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஏனெனில் இந்த போட்டியில் 124 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 163 ரன்கள் குவித்து அசத்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

அவரது இந்த அசத்தலான ஆட்டம் காரணமாக ஆஸ்திரேலியா அணி 367 ரன்களை குவித்தது. பின்னர் 368 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 305 ரன்கள் மட்டுமே குவிக்க ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் டேவிட் வார்னர் கூறுகையில் : இந்த போட்டியின் போது எனக்கு சிறிய அளவிலான தசை பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் முதல் விக்கெட்க்கு நான் மிட்சல் மார்ஷ்சுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் மிக அருமையாக இருந்தது.

- Advertisement -

ஒரு முறை இந்த மைதானத்தில் பந்து வரும் விதத்தை கவனித்த பின்பு எனக்கு பவுலர்களை எதிர்கொள்வது மிகவும் எளிதாகி விட்டது. எனவே அடிக்க வேண்டிய பவுலர்களை மட்டும் குறி வைத்து அடித்தோம். இது போன்ற ஒரு ஆட்டத்தை நான் என்னிடம் இருந்து பார்த்தது எனக்கே மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய திறனை இன்று சரியாக பயன்படுத்தியதாக நினைக்கிறேன். கடந்த போட்டியின் போது சிறப்பாக விளையாடினாலும் இந்த போட்டியில் நீண்ட தூரம் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க : அவரு டீம்க்குள்ள வந்ததும் எங்க ஆட்டம் எப்படி இருக்குதுனு பாத்தீங்களா? – வெற்றிக்கு பின்னர் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

இது போன்ற மைதானங்களில் விளையாடும் போது பெரிய ரன்களை குவிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்தி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி. 35 ஓவர்கள் வரை நாங்கள் விளையாடினால் பெரிய ரன் குவிப்பு வரும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் நினைத்த திட்டம் அனைத்தும் சரியாக நடந்தது. கடைசி 10 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஆரம்பத்திலேயே நாங்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டது இந்த வெற்றிக்கு உதவியதாக டேவிட் வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement