பாதி பிட்னஸோடு விளையாட வச்சி இப்படி அவுட் ஆக்கிடீங்களே – ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அடிலெய்ட்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியும் மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரை கைப்பற்றுவதற்கு இரு அணியும் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

pant 1

- Advertisement -

மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பந்தில் விக்கெட் இழந்தார். இதன் பிறகு புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் விளாசினர்.

அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸை 338 ரன்களுக்கு முடித்துக்கொண்டது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார். அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது நாளின் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை குவித்துள்ளது. ரஹானே 5 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Pucovski

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மன் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்துள்ளார். காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட டேவிட் வார்னர் தற்போது மூன்றாவது போட்டியில் விளையாடுகிறார். தற்போது ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் பிரச்சினை இருப்பதால் 70 சதவிதம் மட்டும் குணமடைந்த டேவிட் வார்னர் இடம்பெற்றார். இதற்காக பயற்சி போட்டியிலும் டேவிட் வார்னர் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் நேற்று நடைப்பெற்று முதல் இன்னிங்ஸில் டேவிட் வார்னர் 8 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்கள் மட்டும் குவித்து இந்திய இளம் வீரர் முகமது சிராஜ் வீசிய பந்தில் விக்கெட் இழந்தார். வார்னர் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பெற வைப்பார் என்றே எதிர்பார்கப்பட்டது. ஆனால் இவரது இந்த மோசமான விக்கெட் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement