3 டெஸ்ட் போட்டியிலும் நட்சத்திர வீரரான இவர் விளையாடுவது சந்தேகம் – நிர்வாகம் அறிவிப்பு

INDvsAUS
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

indvsaus

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்தியா திரும்புகிறார். இதனால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் முகமது ஷமியும் விலகியுள்ளார். இதன்காரணமாக இவர்கள் இருவரும் மீதமுள்ள தொடரில் விளையாடமுடியாது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக டேவிட் வார்னர் மீதமுள்ள ஒருநாள் போட்டிகளிலும் டி20 தொடர்களிலும் இருந்து விலகியிருந்தார். இவர் முதல் டெஸ்ட் போட்டியிலும் இடம்பெறவில்லை. தற்போது நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

warner 1

இந்நிலையில் அவர் அடுத்த 3 ஆவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவது சந்தேகம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறுகையில் “ டேவிட் வார்னர் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணம் அடையவில்லை. இதனால் இவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை. டேவிட் வார்னர் காயம் காரணமாக தங்கியிருந்த சிட்னியில் தற்போது அங்கு கொரானா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் மெல்போர்னுக்கு அவசர அவசரமாக அழைத்துவரப்பட்டார்” என்று அறிவித்துள்ளது.

Warner-2

ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பினால் வார்னர் 3 ஆவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இந்திய அணியினை பொறுத்தவரை 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அதிரடி துவக்கவீரரான ரோஹித் சர்மா இடம்பெறுவார் என்று தெரிகிறது.

Advertisement