சி.எஸ்.கே அணிக்கெதிரான ஒரே போட்டியில் டேவிட் வார்னர் படைத்த பல சாதனைகள் – லிஸ்ட் இதோ

Warner-1
- Advertisement -

நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் விளையாடுவதாக கூறினார். ஆரம்பத்தில் சற்று சறுக்கினாலும் இறுதியில் கேன் வில்லியம்சன் மற்றும் கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாட 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 171 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 64 மற்றும் டேவிட் வார்னர் 55 ரன்கள் குவித்தனர்.

warner 1

- Advertisement -

பின்னர் களமிறங்கிய சென்னை அணி ஓப்பனிங் வீரர்கள் டுப்பிளெசிஸ் மற்றும் ருத்ராஜ் அதிரடியாக விளையாடி சென்னை அணியின் வெற்றியை உறுதி படுத்தினார். ருதுராஜ் 75 ரன்களும் டுப்லஸ்ஸிஸ் 56 ரன்களும் குவித்தனர். இதன் காரணமாக சென்னை அணி 18.3 ஓவரில் மிக எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளைப் பெற்ற சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் மிகவும் மெதுவாக விளையாடினார். இருப்பினும் நேற்றைய போட்டி அவருக்கு ஒரு முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. பல சாதனைகளை ஒரே போட்டியில் வைத்து முடித்துள்ளார். முதல் சாதனையாக கருதப்படுவது நேற்று அவர் அடித்த அரைசதம் ஐபிஎல் தொடரில் அவருடைய 50வது அரை சதம் இது ஆகும். இதற்கு முன்னர் எவரும் இவ்வளவு அரைசதங்கள் குவித்ததில்லை.

warner

அதைப்போல நேற்றைய போட்டியில் வார்னர் அவருடைய டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். பத்தாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற சாதனையை நேற்று அவர் புரிந்தார். இதற்கு முன்னர் கிறிஸ் கெய்ல், பொல்லார்ட் மற்றும் சோயப் மாலிக் மட்டுமே டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தனர்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் 200 சிக்சர் விளாசிய எட்டாவது வீரர் என்றும், 200 சிக்சரை விளாசிய நான்காவது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் விட்டு வைக்கவில்லை. அதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணிக்காக நேற்று முதன் முறையாக 4000 ரன்களை டேவிட் வார்னர் குவித்தார்.

Warner

மற்றும் ஒரு விசித்திர சாதனையாக அவர் இதுவரை விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் 50 ரன்கள் குவிக்க 50 பந்துகளை எடுத்துக் கொண்டதே இல்லை. ஆனால் நேற்றைய போட்டியில் அவர் அரைசதம் குவிக்க 50 பந்துகளை எடுத்துக் கொண்டார். இதன் மூலம் முதல் முறையாக தன்னுடைய போட்டிகளிலேயே அரை சதம் குவிக்க 50 பந்துகள் எடுத்துக்கொண்ட சாதனையையும் நேற்று அவர் பூர்த்தி செய்தார்.

Advertisement